நடராஜர் சிலையினுள் பல தத்து பொருட்களை தம்முள் அடங்கியுள்ளது இதை உருவாக்கிய தமிழனின் சிறப்பும் இது விளக்குகின்றது.
“அணுவில் தொடங்கி அண்டம் வரை தன்னுள் அடக்கிய நடராஜர்” இதில் உண்மை அர்த்தம் பற்றி நாம் இதன் மூலமே விளங்கி கொள்ளலாம்.
நடராஜர் சிலையில் பின் கை ஒன்றில் தீச்சுவாலை , மற்றய கையில் உடுக்கை அமைய பெற்றுள்ளது இது விளக்கும் தத்துவம் ஒளி ,ஒலி சேர்ந்ததே உலகம் ஆகும்.
இதனையே ஆங்கிலத்தில் ” heat ,light ,sound or all form of genertic ” என கூறுகின்றது.அதை போல் நடராஜரினுடைய வலது புறமாக பறந்து கொண்டிருக்கும் ஆடை இந்த உலகில் எதுவும் நிரந்தரம் இல்லை மாயை என்பதை விளக்குகின்றது.மேலும் தீச்சுவாலைகளை இணைக்கும் சக்கரம் மனிதனின் முடிவுள்ளதா வாழ்க்கையை குறிக்கின்றது. ஒருவன் பிறந்தால் ஒருவன் இறப்பான் என்பது விதி .
அடுத்தது அர்த்தநாரீஸ்வரம் இது விளக்குவது ஆணும் பெண்ணும் சமன் என்பதை கூறுகின்றது .இடது மார்பகத்தை இடது கை மறைத்தப்படியும் இடது காதில் கம்மலும் வலது காதில் கடுக்கணும் அமையப்பெற்றுள்ளது.
இப்படியாக சின்ன சின்ன விடயத்தில் பெரிய தத்துவங்களை நடராஜர் சிலை கொண்டுள்ளது இறுதியாக காலின் கீழ் உள்ள மனிதன் இந்த மனிதன் எத்தனை மாந்தர் பிறந்தாலும் இறந்தாலும் இந்த உலகம் அப்படியே தான் இருக்கும் இதற்கு உன் மேல் இருக்கும் நானே சாட்சி . இவ்வாறு ஆழமான பல தத்துவங்களை நடராஜர் சிலை சொல்கின்றது.