நல்ல சில ஆன்மீக சிந்தனைகள் . சொல்வதனால் குறைந்து போகும் பொருள்கள் இரண்டு அவை:- புண்ணியமும், பாவமுமாகும் ஆகும்.
நீ செய்த புண்ணியங்களை – தருமங்களை – நீயே எடுத்துச் சொல்வதனால் புண்ணியம் குறையும்.
நீ செய்த பாவங்களை நீயே பிறரிடம் கூறுவதனால் பாவம் குறையும்.
குறைய வேண்டியது பாவம்; நிறைய வேண்டியது புண்ணியம்.
ஆதலினால் நீ செய்த புண்ணியத்தைக் கூறாதே; பாவத்தைக் கூறு.
நீ இறைவனுடைய கருணையைப் பெற வேண்டுமானால் அதற்கு வழி ஒன்று உண்டு.
அது வெறும் வணக்கமும் வழிபாடும் மட்டுமன்று.
துன்பமுற்றுத் துடிக்கிற உயிர்களிடம் நீ கருனை செய். அவற்றின் துன்பத்தை நீக்கு.
நீ பிற உயிர்களிடம் கருணை செய்தால்
கடவுள் உன்னிடம் கருணை செய்வார்.
கருணையால் கருணையைப் பெறலாம்.
இதனை ஒருபொழுதும் மறவாதே.
உலகத்திலே நீ இரு. ஆனால் உலகம் உன்னிடத்தில் இருக்கக்கூடாது.
குடும்பத்தில் நீ இரு. ஆனால், குடும்பம் உன்னிடத்தில் இருக்கக்கூடாது.
உலகமும் குடும்பமும் உள்ளத்தில் புகுந்தால்
நீ அழுந்திவிடுவாய்.
வண்டிமேல் நீ ஏறு; வண்டி உன்மேல் ஏறக்கூடாது.
கப்பல் கடலில் இருக்க வேண்டும், கடல்
கப்பலில் புகக்கூடாது. கடல் நீர் கப்பலில் புகுந்தால் கப்பல் அழிந்திவிடும்.