சாபம் என்பது மனிதனை அழிக்க வல்லது. இது எமது சமூகத்தால் பெரிதும் பேசப்படும் ஒன்றாகும்.அத்தகைய சாபங்கள் பல வகைப்படுகின்றது .
அதில் மிகவும் கடுமையானது பெண் சாபம் ஆகும்.இனி இவை எப்படி ஏற்படுகின்றது என்று பாப்போம்.
பெண் சாபம்
இது எப்படி ஏற்படுகின்றதென்றால் பெண்களை ஏமாற்றுவதும்,சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும்,மனைவியை கைவிடுவதாலும்வருகிறது.பெண்சாபம் ஏற்பட்டால் வம்சம் அழியும்.
பிரேத சாபம்
இறந்த மனிதனின் உடலை வைத்துக்கொண்டு அவரை இழிவாகப் பேசுவதும்,அவருடைய உடலைத் தாண்டுவதும்,பிணத்தின் இறுதி காரியங்களை செய்யவிடாமல் தடுப்பது,இறந்தவரை வேண்டியவர்கள் பார்க்க அனுமதி மறுப்பதும் பிரதே சாபத்தை ஏற்படுத்தும். பிரேத சாபத்தால் ஆயுள் குறையும்.
பிரம்ம சாபம்
நமக்கு வித்தை கற்றுக்கொடுத்த குருவை மறப்பது.வித்தையை தவறாக பயன்படுத்துவது ,மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுக்காமல் ஒரு வித்தையை மறைத்து வைப்பது, இவ்வாறான காரனனங்களால்,பிரம்ம நஷ்டம் அதாவது ,படிப்பு இல்லாமல் போகும்.
விருட்ச சாபம்
பச்சை மரத்தை வெட்டுவதும் ,கனி கொடுக்கும் மரத்தை பட்டுப்போகச் செய்வதும்,மரத்தை எரிப்பதும்,மரங்களை சூழ்ந்தஇடத்தை,வீடு காட்டும் மனையாக்குவதும் விருட்ச சாபத்தை ஏற்படுத்தும் .விருட்ச சாபத்தால் கடன் உண்டாகும்.
தேவ சாபம்
தெய்வங்களின் பூஜையைப் பாதியில் நிறுத்துவது,தெய்வங்களை இகழ்வது போன்ற காரணங்களால்,தேவ சாபம் ஏற்படும் .தேவ சாபத்தால் உறவினர்கள் பிரிந்து விடுவார்கள் .
குலதெய்வ சாபம்
இது நமது முன்னோர்கள் பூஜித்த தெய்வத்தை மறக்காமல் இருப்பது. குலதெய்வ சபத்தால் குடும்பத்தில் ஒரு போதும் மகிழ்ச்சி ஏற்படாமல் போகும் .ஒருவித துக்கம் சூழ்ந்துவிடும்.