மனதை அதன் போக்கில் விடுங்கள் .
கழுதை போல ஊர் மேய்ந்துவிட்டு சாப்பாட்டிற்காக வந்து அமைதியாக வீட்டுக்கு வந்து விடும்
அதை அடக்க நினைத்தால் மிரண்டு தெருத்தெருவாக தான் அலையும்.
காலையில் நேரமே ஆக செல்ல வேண்டும் அதனால் இப்பொழுது படுக்கையில் சீக்கிரம் தூங்க வேண்டும் என்று நினைத்தாலே தூக்கம் வராது சீக்கிரம் தூங்க வேண்டும் சீக்கிரம் தூங்க வேண்டும் என்று மனதை மனம் உறுத்திக்கொண்டே இருக்கும் அதனால்தான் பெரியோர்கள் சொன்னார்கள் மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு என்று
எல்லா சங்கடங்களையும் அவமானங்களையும் பிரச்சினைகளையும் பார்த்து வழி கள் ஒன்றும் தோன்றாமலும் அமைதியாகிவிடும் .அதனை ஒருபோதும் கட்ட நினைக்காதீர்கள்.
-திரு .குஷ்வந்த் சிங்-
காயத் தேர் ஏறி மனப்பாகன் கை கூட்ட
மாயத் தேர் ஏறி மயங்கும் அவை உணர்
நேயத் தேர் ஏறி நிமலன் அருள்பெற்றால்
ஆயத் தேர் ஏறி அவன் இவன் ஆமே
(திருமந்திரம் – 1651)
திருமூலர் மனதைப் ‘பாகன்’ எனக் கூறுகிறார். பாகன் சொன்னபடிதான் யானை கேட்க வேண்டுமே தவிர, யானை சொன்னபடிப் பாகன் கேட்கக்கூடாது. கேட்டால் யானை மட்டுமல்ல, அத்துடன் சேர்ந்து பாகனும் போய் விடுவார். அதுபோல, மனம் காட்டும் நல்வழியில்தான் உடம்பு செயல்பட வேண்டுமே தவிர, உடம்பு கேட்கும் வழியில் மனம் செயல்பட ஆரம்பித்தால் கதை முடிந்து விடும்.