சித்தி சுத்தி என்றால் என்ன
“பேசாமல் இரு ” என்று கட்டளை போட்டு வாயை மூடிக் கொண்டு விட்டால் , அது ஓரளவாவது பேசாதிருக்கிறது.”பார்க்காதே ” என்று உத்தரவு போட்டுக் கண்ணை மூடிக் கொண்டு விட்டால், கண் ஓரளவாவது பார்க்காமல் இருக்கிறது.
ஆனால் இந்த மனத்திடம் மட்டும் ” நினைக்காமல் இரு”என்று எவ்வளவு தான் முடிக்க கொண்டாலும் அது கேட்பதில்லை.
நாம் “நினை” என்றால் மனம் நினைக்க வேண்டும்” நினைக்காதே ” என்றால் .நினைக்காமலிருக்க வேண்டும்.
அப்போது தான் நமக்கு மனம் சுவாதீனமாயிற்று . நமக்குச் சித்த சுவாதீனம் இருக்கிறது என்று அர்த்தம்.