1
நிம்மதியாக இருங்கள் எதுவும் உங்கள் கையில் இல்லை உலகிலுள்ள அனைவருக்கும் ஏதோ ஒரு பொறுப்பும் ஒரு கடமை இருக்கும் அது அவர்களின் அறியாமையைத் தவிர வேறில்லை எது உங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது என்று சற்றே சிந்தியுங்கள்.
உங்கள் உடல் உங்களின் கட்டுப்பாட்டில் இல்லையே உங்களின் உடம்பே உங்கள் பேச்சை கேட்காத போது உலகில் வேறு யார் கேட்பார் உடலை விடுங்கள் உங்கள் தலைமுடி கூட உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை எனவே எதையும் கட்டுப்படுத்தாமல் நிம்மதியாக இருங்கள்.