கண் திருஷ்டி நீங்க சிறந்த வழிகள். குங்குமம் கலந்த நீர் , வெற்றிலை மீது எரியும் கற்பூரம் ஆகியவற்றுக்கு தீய சக்திகளை விரட்டும் ஆற்றல் உண்டு.
பெரிய முகம் பார்க்கும் கண்ணாடியை வரவேற்பு அறையில் வைக்கலாம்.
தொட்டியில் கருப்பு ,சிகப்பு மீன்கள் வளர்க்கலாம்.
கண்திருஷ்டி கணபதி படம் வைக்கலாம்.
வாத்திய இசை , மந்திரங்களை ஒலிக்க விடலாம்.
வாசலில் கற்றாலை ,சப்பாத்தி கள்ளி , மஞ்சள் ரோஜாவை வளர்க்கலாம்.
ஆகாச கருடன் என்ற கிழங்கை மஞ்சள் ,சந்தானம்,குங்குமம் வைத்து கருப்பு கம்பெனி கயிற்றில் கட்டி வீட்டின் வாசலில் தொங்க விடலாம்.
எலுமிச்சை பழத்தை அறுத்து ஒரு பகுதியில் குங்குமம் மற்றுமொறு பகுதியில் மஞ்சள் தடவியும் வைக்கலாம்.
இரு வேளை சாம்பிராணி பொடியுடன் கருவேலம் பட்டை பொடி , வெண்கடுகுத்தூள் கலந்து தூப தீப ,புகை காட்டலாம்.
வாரம் ஒரு முறை கல் உப்பை குளிக்கும் நீரில் கலந்து குளிக்கலாம்.