தீயவைகளை செய்யாதே : ஒரு சீடன் மற்றவர்கள் செய்த சிறிய தவறுகளை பற்றி உள்ளதும் இல்லாததுமாய் செய்திகளை மற்றவர்களிடம் சொல்லும் பழக்கம் உடையவனாய் இருந்தான் . அதைக் கண்ட குரு அவனைக் கண்டித்தார். அவன் மன்னிப்பு கோரினான். ஆனாலும் அவனுடைய செய்கையின் தீமை அவன் மனதில் ஆழமாய் பதியவில்லை என்பதை அறிந்து குரு ,
அவனிடம் ஒரு சிறு பஞ்சு மூட்டையைத் தந்து நகரின் மையத்தில் உள்ள மைதானம். ஒன்றில் நின்று அதை சிறிது சிறிதாகப் பிய்த்து காற்றில் ஊதி பறக்க விட்டு வரும்படி சொன்னார் . சீடன் வெகு சுலபமாக அதைச் செய்து விட்டு வ்ந்தான் . குரு சொன்னான் ” சரி இப்போது போய் அதைஎல்லாம் ஒன்று விடாமல் சேகரித்து கொண்டு வா” சீடன் திகைத்தான் .
இதென்ன ஆகிற செயலா?”குருவே அந்த பஞ்சு காற்றில் இந்நேரம் எங்கெங்கு பறந்து இருக்கிறதோ? அதை எப்படி மறுபடி சேகரித்து வர முடியும்? ” ஒரு மணி நேரத்திற்கு முன்னால் பறக்க விட்ட பஞ்சுக்களை உன்னால் சேகரித்து திரும்பிக் கொண்டு வர முடியவில்லை மற்றவர்களை பற்றி என்னனென்னவோ சொல்லி வதந்திகளை பறக்க விட்டு வந்து இருக்கிறாய் அவை யார் யார் வாயில் எப்படி எல்லாம் மீண்டும் திரிந்து என்னனென்ன விளைவுகளை ஏற்படுத்தி இருக்கின்றனவோ? நீ மன்னிப்பு கேட்டதன் மூலம் அவற்றைத் திரும்ப பெற முடியும் என்று நினைக்கிறாயா? அப்போது தான் சீடனுக்கு தன் செயலின் தீமை முழுவதுமாகப் புரிந்தது.