இப்பொழுது பல பெண்கள் நெற்றியில் குங்குமம் வைப்பதை மறந்து கொண்டிருக்கிறார்கள் இதில் வகிட்டில் எங்கே வைப்பது? அதுவும் ஸ்டிக்கர் பொட்டு வைப்பவர்கள் வகிட்டைப் பற்றிக்கவலைப்படுவதில்லை. ஆனால் நெற்றி வகிட்டில் அவசியம் குங்குமம் வைக்க வேண்டும். அது அவர்கள் சுமங்கலித்துவத்தை அதிகப்படுத்தும். அதாவது கணவனின் ஆயுள் தோஷத்தை நீக்கும். வகிட்டில் குங்குமம் வைத்துக் கொள்வதால், பெண்களின் கர்ப்பப்பை சம்பந்தமான இயக்கங்கள் சரியாக அமையும்.
மூளைக்குச் செல்லும் நரம்புகள் அதிகமான உஷ்ணத்தை மூளைக்கு அனுப்பாமல், கட்டுப்படுத்தக்கூடிய பகுதி நெற்றியாகும். அதனால்தான், நெற்றியில் குங்குமம் இடுவதால் அந்தச் சூடு உடனடியாகத் தணிகிறது மகாலட்சுமி ஒவ்வொரு இடத்தில் வாசம் செய்கின்றாள். அப்படிப்பட்ட இடங்களில் ஒன்று பெண்கள் வகிடு. அது மகாலட்சுமி வாசம் செய்யும் புள்ளி அங்கே குங்குமம் வைப்பதினால் சகல ஐஸ்வர்யங்களும் நல்வாழ்வும் கிடைக்கும். அது மட்டுமல்ல காலில் அணியும் மெட்டியும், கழுத்தில் அணியும் தாலியும், வகிட்டில் வைக்கும் குங்குமமும் பெண்ணின் மங்கள கரத்தை அதிகரிப்பதோடு, அவள் திருமணமானவள் என்பதையும் சொல்லும்.