இந்த ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டிகள் ரத்து செய்யப்படும் நிலையில் உள்ளது
காரணம் கொரோனா பாதிப்பு மே மாதத்திற்குள் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வராவிட்டால் இந் நிலை ஏற்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஜூலை மாதம் 24ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி வரை டோக்கியோவில் ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் சீனாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு கொரோனா பரவி வருவதையடுத்து ஒலிம்பிக்ஸ் போட்டி ரத்தாக வாய்ப்புள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்ததாக அசோசியேட் பிரஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. போட்டியை ஒத்தி வைக்கவோ வேறு இடத்திற்கு மாற்றவோ வாய்ப்பில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.