0
2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரான மஹிந்தானந்த அளுத்கமகேவின் கருத்து தொடர்பான விசாரணைகளில் வாக்குமூலம் அளிக்க வருமாறு முன்னாள் அணித்தலைவரான குமார் சங்கக்காரவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து வாக்குமூலம் வழங்க முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்கார, விளையாட்டு குற்றங்களை தடுக்கும் விசேட விசாரணை பிரிவில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.