இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் மற்றும் பயிற்சியாளருமான நுவான் சொய்ஷா மீதான ஐ.சி.சி ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 3 குற்றச்சாட்டுக்கள் தீர்ப்பாயத்தால் நிரூபிக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.சி தெரிவித்துள்ளது.
நவம்பர் 2018-ல் ஐ.சி.சி ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சொய்சா மீது குற்றம் சாட்டப்பட்டது, மேலும் அவர் ஒரு தீர்ப்பாயத்தின் முன் விசாரணைக்கு ஆஜராகிய பின்னர் அனைத்து குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது.
சொய்ஸாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் மற்றும் எதிர்வரும் நாட்களில் அவருக்கான கூடுதல் தடைகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி-யின் சட்ட விதிகளான, 2.1.1, 2.1.4, 2.4.4 ஆகிய மூன்றில் சொய்சா குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.