நடராஜன்களையும் வியாஸ்காந்துகளையும் பற்றிய சுவாரசியமான முகநூல் குறிப்பு ஒன்று..
“விளையாடி நீ ஒன்னுமே கிழிக்கப்போறதில்லை.”
“விளையாட்ட நம்பி போனா ரோட்ல தான் நிக்கனும் “
“படிப்புத்தான் முக்கியம்,படிப்புத்தான் சோறு போடும் “
“விளையாட்டால நாமல்லாம் சாதிக்க முடியாது..நம்ம பிறப்பு அப்புடி”
இதுல்லாம் நம் ஊர் பெற்றோர்கள் வாயில இருந்து வாற அடுக்குமொழிக்கோர்வைகள்,இதுல தப்பு ஒன்னுமே இல்ல,ஏன்னா அவங்க பாத்ததயும் அனுபவிச்சதயும் வைச்சு, விளையாட்டு ஒரு மாயை அந்த மாயைக்குள்ள என் பிள்ளை சிக்கி ஒன்னுமே இல்லாம போயிரக்கூடாது என்ற ஏக்கத்துல சொல்லிமுடித்த வார்த்தைகள்,ஊர்க்குருவி பருந்தாகாது என்பதை உணர்ந்த வார்த்தைகள்.
கிளாஸ் க்கு வராம ஒருத்தன் கிரவுண்டுக்கு போனான்னா அவன யாரும் கூப்பிட்டு ஊக்கிவிச்சதுமில்லை,தூக்கி விட்டதுமில்லை, அப்பிடி தூக்கி விட்டாலும் O/L & A/L க்கு பிறகு அது நிலைச்சு நின்னதுமில்லை,இத பார்த்து பல பேரு கிரவுண்ட் பக்கத்தை நினைச்சுக்கூட பார்த்ததில்லை,
நல்லா விளாடுனவன்,விளையாட கூடியவன் லாம் அவன் கனவுகளை புத்தகத்துக்குள்ள மூடி வைச்சத தான் பாத்திட்டுருந்திருக்கம் , சின்ன வயதுல இருந்து நல்லா விளையாட கூடியவன் பரீட்சைக்கு பயந்து மட்டையையும், பந்தையும் சிலந்தி வலைக்கு சிக்க வைச்சிட்டத தான் பாத்துட்டுருந்திருக்கம்,ஏன்னா நம் சூழலும் சமுதாயமும் அப்புடி.
உண்மையிலயே பிறப்பால வேறாக்கப்பட்டம் என்கிற ஒரு வார்த்தை உண்மையாக்கப்பட்டதையும் ,மைதானத்தில் ஆட வேண்டியவன் பரீட்சைகளின் பிடியில் ஆட்கொள்ளப்பட்டதையும் ,விளையாட்டு என்பது ஒரு மாயை தான் அது சனி ஞாயிறுகளில் சந்தோசத்துக்காக மட்டும் ஆடக்கூடிய ஒன்று என்பதையும், ஊர்க்குருவி பருந்தாகாது என்பதையும் நம்ப ஆரம்பித்துக்கொண்டிருந்த போது மாயைகளையும், வலைகளையும் பிய்த்து,கிழித்து உடைத்தெறிந்தபடி எம் ஊர்க்குருவிகள் பறக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
LPL என்னும் வானமும் அதுக்கு தக்க வாய்ப்பளித்து அழகு பார்த்துக்கொண்டிருக்கிறது,எம்மவர்களும் அதில் தடம் பதித்து, கொடி ஏற்றிக்கொண்டிருக்கிறார்கள்,வாய்ப்புகள் வாய்க்கப்பெற்று வெற்றி நடைபோட்டு பறக்கப்போகும் எம் ஊர் பருந்தானவர்களுக்கு சொல்வது யாதெனில்….
“எனிமேல் விளையாடியும் வெற்றி அடையலாம் என்பதை உண்மையாக்கி விடுங்கள்..”
ஏன் என்றால் கனவுகளை ஏந்தியபடி ,இங்கு உங்களைப்போல ஆக வேண்டும் என்று, ஆயிரமாயிரம் நடராஜன்களும், வியாஸ்காந்துகளும் ஊர்க்குருவிகளாக, வாழ்க்கையுடனும் சவால்களுடனும் எம் சமுதாயத்துடனும் போராடிக்கொண்டிருக்கிறார்கள் பருந்தாகி பறப்பதற்காக….
நன்றி – முகநூல்