நியூசிலாந்து அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடரின் இரண்டாவது போட்டி இன்று நடைபெறவுள்ளது.
செடன் பார்க், ஹமில்டன் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில் நியூசிலாந்து அணிக்கு கேன் வில்லியம்சனும் பாகிஸ்தான் அணிக்கு சதாப் கானும் தலைமை தாங்கவுள்ளனர்.
முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்களால் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
குறித்த போட்டியில் தனிப்பட்ட காரணங்களுக்காக விளையாடாதிருந்த கேன் வில்லியம்சன் மீண்டும் இரண்டாவது போட்டியில் இணைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று விளையாடும் நியூசிலாந்து அணியில் மார்ட்டின் கப்டில், க்ளென் பிலிப்ஸ், கேன் வில்லியம்சன், டிம் சீஃபர்ட், டெவன் கான்வே, ஜிம்மி நீஷம், கைல் ஜேமீசன், ஸ்கொட் குகலீஜ்ன், இஷ் சோதி, டிம் சவுதி, ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்தோடு ஏற்கனவே முதலாவது போட்டியில் தோல்வியடைந்துள்ள பாகிஸ்தான் அணியில் எந்த பெரிய மாற்றங்களையும் செய்ய வாய்ப்பில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி பாகிஸ்தான் அணியில், மொஹமட் ரிஸ்வான், அப்துல்லா ஷாஃபிக், ஹைதர் அலி, மொஹமட் ஹபீஸ், சதாப் கான், குஷ்டில் ஷா, இமாத் வாசிம், பஹீம் அஷ்ரப், வஹாப் ரியாஸ், ஷஹீன் அப்ரிடி, ஹரிஸ் ரவூப் ஆகியோர் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.