செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் எமிரேட்ஸ் கிரிக்கெட் அணியின் இரு வீரர்களுக்கு கொரோனா

எமிரேட்ஸ் கிரிக்கெட் அணியின் இரு வீரர்களுக்கு கொரோனா

1 minutes read
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட் அணியின் வீரர்கள் மீது ஐ.சி.சி. ஊழல்  குற்றச்சாட்டு - No.1 Tamil website in the world | Tamil News | News in  tamil | Sri Lanka Newspaper Online ...

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட் அணியின் துணைத் தலைவர் சிராக் சூரி மற்றும் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஆரியன் லக்ரா ஆகியோர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள இவர்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளதாக எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB) வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

அயர்லாந்து மற்றும் எமிரேட்ஸ் அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர் இன்று ஆரம்பமாகவதற்கு முன்னதாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எனினும் திட்டமிட்டபடி தொடர் தொடர்ந்தும் முன்னேறும் என எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ள நிலையில் ஒருநாள் தொடரின் முதல் போட்டி தற்சமயம் அபுதாபில் நடைபெற்று வருகிறது.

கொரோனா தொற்றுக்குள்ளான இரு வீரர்களும் தற்போது தனிமைப்படுத்திலில் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளனர். 

கொவிட் நெறிமுறைகளின்படி அனைத்து பகுதிகளும் உடனடியாகவும் முழுமையாகவும் சுத்திகரிக்கப்பட்டுள்ளதுடன், அணியில் வேறு வீரர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளதாகவும் எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More