இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல். ரி-20 லீக் தொடரில், இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் டோனி, இந்திய மதிப்பில் 150 கோடி ரூபாய் ஊதியம் பெற்றுள்ளார்.
2008ஆம் ஆண்டு ஐ.பி.எல். ரி-20 லீக் தொடர் தொடங்கியதிலிருந்து எதிர்வரும் தொடர்வரை டோனி பெறும் சம்பளம் இந்திய மதிப்பில் 150 கோடி ரூபாயை கடந்துள்ளது.
டோனி இதுவரை நடந்துள்ள 13 சீசன்களிலும் சென்னை அணியின் தலைவராக இருந்துள்ளார். அடுத்த தொடரிலும் அவர் 15 கோடி ரூபாய் சம்பளத்துடன் அணித்தலைவராக நீடிப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இதுவரை ஐ.பி.எல் மூலம் 137.8 கோடி ரூபாயை டோனி சம்பளமாக பெற்றுள்ளார். இந்நிலையில் அடுத்த தொடரில் 15 கோடி ரூபாயும் சேரும்போது அவர் ஐ.பி.எல் மூலம் 150 கோடி சம்பளம் பெறும் முதல் வீரர் என்ற நிலையை அடைவார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ரோஹித் சர்மா 131.6 கோடியுடன் இரண்டாவது இடத்திலும், பெங்களூர் அணித்தலைவர் விராட் கோஹ்லி 126.2 கோடியுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்