இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி, இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.
காலி மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகவுள்ள இப்போட்டியில், இலங்கை அணிக்கு தினேஷ் சந்திமாலும், இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட்டும் தலைமை தாங்கவுள்ளனர்.
ஏற்கனவே முன்னதாக நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
இதனால் இப்போட்டியில் இலங்கை அணி பதிலடி கொடுக்கும் முனைப்பிலும், இங்கிலாந்து அணி இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை முழுமையாக கைப்பற்றும் ஆர்வத்திலும் உள்ளது.