இந்தியாவில் நடைபெற்றுவரும் விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில், மும்பை அணியின் வீரரான பிரித்வி ஷா இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார்.
புதுச்சேரி அணிக்கெதிரான போட்டியில், பிரித்வி ஷா, 152 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 31 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காது 227 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
இதன்மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இரட்டைச் சதமெடுத்த ஏழாவது இந்திய வீரர் என்கிற பெருமையை பிரித்வி ஷா பெற்றுள்ளார்.
இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர், சேவாக், ரோஹித் சர்மா, ஷிகர் தவன், சஞ்சு சாம்சன், யாஷஸ்வி ஜெயிஸ்வால் ஆகியோர் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இரட்டைச் சதமெடுத்த இந்தியர்கள்.
நான்கு நாள்களுக்கு முன்பு டெல்லி அணிக்கு எதிராக சதமடித்த பிரித்வி ஷா, இப்போது இரட்டைச் சதமெடுத்து அசத்தியுள்ளார்.