சுட் டி பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், வெற்றிபெற்று டேவிட் கொஃபின் சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
எதிர்பார்ப்பு மிக்க மகுடத்திற்கான இறுதிப் போட்டியில், பெல்ஜியத்தின் டேவிட் கொஃபினும் ஸ்பெயினின் ரொபர்டோ பாடிஸ்டா அகுட்டும் பலப்பரீட்சை நடத்தினர்.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டை ரொபர்டோ பாடிஸ்டா அகுட், 7-5 என செட்டை போராடி கைப்பற்றினார்.
தொடர்ந்து நடைபெற்ற செட்டுகளில் மீண்டெழுந்த டேவிட் கொஃபின், ஆக்ரோஷமாக விளையாடி செட்டுகளை 6-4, 6-2 என கைப்பற்றி சம்பியன் பட்டத்தை வென்றார்.