செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு ருதுராஜ் ருத்ர தாண்டவம் | பதிலடி கொடுத்து ஆட்டத்தை முடித்தது ராஜஸ்தான்

ருதுராஜ் ருத்ர தாண்டவம் | பதிலடி கொடுத்து ஆட்டத்தை முடித்தது ராஜஸ்தான்

4 minutes read

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான நேற்றைய ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான் அணி, அதிரடியான ஆட்டத்தினால் 7 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது.

2021 இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 47 ஆவது ஆட்டம் நேற்றிரவு அபுதாபயில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடுமாறு சென்னையை பணித்தது.

அதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை, ருதுராஜ் கெய்க்வாட்டின ருத்ர தாண்டவத்துடன் 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 189 ஒட்டங்களை குவித்தது.

அணி சார்பில் டூப்பிளஸி 25 ஓட்டங்களுடனும், ரய்னா 3 ஓட்டங்களுடனும், மொய்ன் அலி 21 ஓட்டங்களுடனும் மற்றும் அம்பத்தி ராயிடு 2 ஓட்டங்களுடனும் ஆட்டமிந்தனர்.

எனினும் ஆரம்ப வீரராக களமிறங்கிய ருதுராஜ் 60 பந்துகளில் ஐந்து சிக்ஸர்கள், ஒன்பது பவுண்டரிகள் அடங்கலாக 101 ஓட்டங்களுடனும், ஜடேஜா 15 பந்துகளில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகள் அடங்கலாக 32 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

190 என்ற கடினமான இலக்கினை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட களமிறங்கிய ராஜஸ்தானுக்கு, ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய எவன் லூயிஸ் மற்றும் ஜெஸ்ஷ்வால் நல்லதொரு ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்தனர்.

இதனால் ராஜஸ்தான் அணி பவர் – பிளேயான முதல் ஆறு ஓவர்கள் நிறைவில் 81 ஓட்டங்களை குவித்தது.

இதனிடையே 5.1 ஆவது ஓவரில் இளம் வீரர் ஜெய்ஷ்வால் 19 பந்துகளை எதிர்கொண்டு அரைசதம் குவித்தார். 

இதன் மூலம் ஐ.பி.எல். அரங்கில் விரைவாக அரைசதம் கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். 

எனினும் அதே ஓவரின் மூன்றாவது பந்து வீச்சில் எவன் லூயிஸ் மொத்தமாக 12 பந்துகளில் 27 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்க, 6.1 ஆவது ஓவரில் ஜெய்ஷ்வாலும் 21 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கலாக 50 ஓட்டங்களுடனே ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் சஞ்சு சாம்சன் – சிவம் டூபே ஜோடி சேர்ந்து சென்னை அணிக்கு மரண பயத்தை காண்பித்தனர். இந்த இணைப்பாட்டம் 15 ஓவர்கள் நிறைவில் அணியின் ஓட்ட எண்ணிக்கையை 165 ஆக அதிகரிக்கச் செய்தது.

15.4 ஆவது ஓவரில் சஞ்சு சாம்சன் 28 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, க்ளென் பிலிப்ஸுடன் கைகோர்த்த சிவம் டூபே அதிரடி காட்டினார்.

இறுதியாக 17.3 ஆவது ஓவரிலேயே ராஜஸ்தான் அணி 190 ஓட்டங்களை பெற்று வெற்றியை பதிவுசெய்தது.

ஆடுகளத்தில் சிவம் டூபே 42 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கலாக 64 ஓட்டங்களுடனும், க்ளென் பிலிப்ஸ் 14 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

போட்டியின் ஆட்டநாயகன் விருதை சென்னை அணியின் ரூதுராஜ் பெற்றார்.

இதேவேளை நேற்று மாலை சார்ஜாவில் இடம்பெற்ற 46 ஆவது லீக் ஆட்டத்தில் ரிஷாட் பந்த் தலைமையிலான டெல்லி கெப்பிட்டல்ஸ் மற்றும் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 129 ஓட்டங்களை பெற்றது, 130 என்ற இலகுவான வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்லி 19.1 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்புக்கு 132 ஓட்டங்களை பெற்று வெற்றியை பதிவுசெய்தது.

இன்று மாலை சார்ஜாவில் ஆரம்பமாகும் 48 ஆவது லீக் போடடியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு – பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

அதேசமயம் டுபாயில் இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள போட்டியில் சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

Photo Credit ; IPL

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More