செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு இங்கிலாந்து கிரிக்கெட் வீரருக்கு போட்டித் தடை

இங்கிலாந்து கிரிக்கெட் வீரருக்கு போட்டித் தடை

1 minutes read

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரரான ஜேசன் ரோய்க்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன் 2,500 யூரோ அபராதத்தை  இங்கிலாந்து கிரிக்கெட் சபை விதித்துள்ளது.

ஜேசன் ரோய் மீது விதிக்கப்பட்ட அபராதம் மற்றும் போட்டித் தடை ஆகியவற்றுக்கான காரணம் என்ன என்பது குறித்து  இங்கிலாந்து கிரிக்கெட் சபை இதுவரை தெளிவான அறிக்கையை வெளியிடவில்லை.

எனினும், இங்கிலாந்து கிரிக்கெட் சபைக்கு தீங்கு இளைக்கும் செயலில் ஈடுபட்டுள்ளார் என்பதை ஜேசன் ரோய் ஒப்புக்கொண்டுள்ளார் என்பதை இங்கிலாந்து கிரிக்கெட் சபை குறிப்பிடுகிறது. 

ஆரம்பத்தில் 12 மாதங்களாக விதிக்கப்பட்டிருந்த இந்த இடை நீக்கமானது, அவரின் நன்னடத்தை மற்றும் குற்றத்தை ஒப்புக்கொண்டதன் காரணத்தினாலும், அவருக்கான போட்டித் தடை 2 போட்டிகளாக குறைக்கப்பட்டதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை தெரிவிக்கிறது. 

England's Jason Roy desperate to return to cricket, even behind closed  doors | Cricket - Hindustan Times

இதேவேளை, ஜேசன் ரோய் எதிர்வரும் ஐ.பி.எல். போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடுவதாக இருந்த போதிலும், அண்மையில் ஐ.பி.எல். போட்டிகளிலிருந்து விலகுவதாக தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More