செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு ஐபிஎல் 2022 | மலிங்காவின் சாதனையை முறியடிக்க வாய்ப்பு

ஐபிஎல் 2022 | மலிங்காவின் சாதனையை முறியடிக்க வாய்ப்பு

1 minutes read

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் பட்டியலில் சென்னை அணியை சேர்ந்த பிராவோ 2-வது இடத்தில் உள்ளார்.

ஐ.பி.எல். போட்டியில் அதிக விக்கெட் சாய்த்தவர் மலிங்கா. இலங்கையைச் சேர்ந்த அவர் 122 இன்னிங்சில் 170 விக்கெட் வீழ்த்தி உள்ளார். 13 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தியது அவரது சிறந்த பந்து வீச்சாகும். அவர் விளையாடிய 11 ஐ.பி.எல்.லிலும் மும்பை இந்தியன்ஸ் அணியிலேயே இடம் பெற்று இருந்தார்.

பிராவோ அவரை விட 3 விக்கெட் பின்தங்கி 2-வது இடத்தில் உள்ளார். இந்த சீசனில் மலிங்காவின் சாதனை முறியடிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

அதிக விக்கெட் வீழ்த்திய ‘டாப்5’ வீரர்கள்:- முதல் இடத்தில் மலிங்கா 170 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். சராசரி 19.79, சிறந்த பந்து வீச்சு 5/13. இரண்டாவது இடத்தில் பிராவோ 167 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். சராசரி 24.31 சிறந்த பந்து 4/22. 3-வது இடத்தில் அமித் மிஸ்ரா 166 விக்கெட்டுகள். சராசரி 23.95, சிறந்த பந்து வீச்சு 5/17. 4-வது இடத்தில் சாவ்லா 157 விக்கெட்டுகள். சராசரி 27.39 சிறந்த பந்து வீச்சு 4/17. 5-வது இடத்தில் ஹர்பஜன் சிங். சராசரி 26.86 சிறந்த பந்து வீச்சு 5/18 ஆகும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More