செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு 220 ஓட்டங்களால் பங்களாதேஷை வெற்றியீட்டிய தென் ஆபிரிக்கா

220 ஓட்டங்களால் பங்களாதேஷை வெற்றியீட்டிய தென் ஆபிரிக்கா

2 minutes read

பங்களாதேஷுக்கு எதிராக டேர்பன், கிங்ஸ்மீட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்கா 220 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

SA Vs BAN, First Test: Bangladesh, 53 All Out, Crash To Heavy Defeat After Keshav Maharaj's 7/32 - Highlights

தென் ஆபிரிக்காவினால் நிர்ணயிக்கப்பட்ட 274 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பங்ளாதேஷ் 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடியபோது 2 சுழல்பந்து வீச்சாளர்களை மாத்திரம் பயன்படுத்திய தென் ஆபிரிக்கா, 19 ஓவர்களில் 53  ஓட்டங்களுக்கு சுருட்டியது.

கேஷவ் ஆத்மானந்த் மஹாராஜ் 10 ஓவர்களில் 32 ஓட்டங்களைக் கொடுத்து 7 விக்கெட்களைக் கைப்பற்றியதுடன் சைமன் ஹார்மர் 9 ஓவர்களில் 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்ளை வீழ்த்தினார்.

பங்களாதேஷின் 2ஆவது இன்னிங்ஸில் நஜ்முல் ஹொசெய்ன் ஷான்டோ 24 ஓட்டங்களையும் தஸ்கின் அஹ்மத் 14 ஓட்டங்களையும் பெற்றனர். இவர்கள் இருவரைவிட வேறு எவரும் இரட்டை இலக்க எண்ணிக்கையை நெருங்கவில்லை.

போட்டியின் கடைசி நாளான இன்று திங்கட்கிழமை (04) தனது 2ஆவது இன்னிங்ஸை 3 விக்கெட் இழப்புக்கு 11 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த பங்களாதேஷ், எஞ்சிய 7 விக்கெட்ளை ஒரு மணித்தியாலத்துக்குள் 13 ஓவர்களில் இழந்து தோல்வியைத் தழுவியது.

கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா முதல் இன்னிங்ஸில் 397 ஓட்டங்களைப் பெற்றதுடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் முதல் இன்னிங்ஸில் 298 ஓட்டங்களைப் பெற்றது.

69 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்தவாறு 2ஆவது இன்னிங்ஸைத் தொடர்ந்த தென் ஆபிரிக்கா துடுப்பாட்டத்தில் சிரமத்தை எதிர்கொண்டு 204 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது,

எண்ணிக்கை சுருக்கம்

தென் ஆபிரிக்கா 1ஆவது இன்: 367 (டெம்பா பவுமா 93, டீன் எல்கர் 67, சரெல் ஏர்வி 41, சைமன் ஹார்மர் 38 ஆ.இ., காலித் அஹ்மத் 92 – 4 விக்., மெஹ்தி ஹசன் மிராஸ் 94 – 3 விக்.)

பங்களாதேஷ் 1ஆவது இன்: 298 (மஹ்முதுல் ஹசன் ஜோய் 137, லிட்டன் தாஸ் 41, நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ 38, சைமன் ஹார்மர் 103 – 4 விக்., லிஸாட் வில்லியம்ஸ் 54 – 3 விக்.)

தென் ஆபிரிக்கா 2ஆவது இன்: 204 (டீன் எல்கர் 64, ரெயான் ரிக்கெல்டன் 39, கீகன் பீட்டர்சன் 36, ஈபாடொத் ஹொசெயன் 40 – 3 விக்., மெஹிதி ஹசன் மிராஸ் 85 – 3 விக்., தஸ்கின் அஹ்மத் 24 – 2 விக்.),

பங்களாதேஷ் 2ஆவது இன்: 53 (நஜ்முல் ஹொசெய்ன் சன்டோ 26, தஸ்கின் அஹ்மத் 14, கேஷவ் மஹாராஜ் 32- 7 விக்., சைமன் ஹார்மர் 21 – 3 விக்.)

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More