விளையாட்டுத் துறையில் திறமையான பெண்களை மேம்படுத்துவதற்கும் அவர்களை வளர்ப்பதற்கும் இந்திய இராணுவம் பெண்களுக்கான கிரிக்கெட் லீக்கை பஞ்சகாமில் ஏற்பாடு செய்துள்ளது.
இராணுவத்தின் அறிக்கையின்படி, காஷ்மீர் இளைஞர்கள் மிகவும் விரும்பி விளையாடும் விளையாட்டுகளில் கிரிக்கெட் ஒன்றாகும்.
“தற்போதைய சர்வதேச மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பெண்களை மேம்படுத்து வதற்கும், மேலும் இந்த விளையாட்டில் அவர்களின் திறமை மற்றும் ஆர்வத்தை வெளிப்படுத்த ஒரு தளத்தை அவர்களுக்கு வழங்குவதற்கும் ஒரு உத்வேகமாக எடுத்துக் கொண்டு, இன்று பஞ்சகம் கிராமத்தில் மகளிர் கிரிக்கெட் சூப்பர் லீக் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,” என்று அது கூறியது.
ரி -10 கிரிக்கெட் போட்டிக்காக நான்கு அணிகள் பதிவு செய்துள்ளன.
கடந்த திங்களன்று, கிரிக்கெட் சூப்பர் லீக்கின் தொடக்க ஆட்டம் ராவத்போரா ரைடர் மற்றும் சௌகிபால் சார்ஜர்ஸ் இடையே நடைபெற்றது.
ராவத்போரா ரைடர்ஸ் டாஸ் வென்று சௌகிபால் சார்ஜர்ஸ் அணியை முதலில் பேட் செய்ய அழைத்தது.
சௌகிபால் சார்ஜர்ஸ் 110 ஓட்டங்கள் குவித்தது. இதில் கேப்டன் ஃபரீடா 22 பந்துகளில் 7 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் உட்பட 60 ஓட்டங்கள் எடுத்தார்.
ராவத்போரா ரைடர்ஸ் அணியின் தலைவர் முஸ்கான் பேட்டிங்கிற்கு வெளியே வந்து ஸ்கோரை சமன் செய்ய தனது அணியை ஒற்றைக் கையால் இழுக்கும் வரை ஓட்டங்கள் சேஸ்சாத்தியமற்றதாகத் தோன்றியது.
ஆட்டம் கடைசி பந்து வரை நீடித்தது, இறுதியில் ஒரு சூப்பர் ஓவரில் ராவத்போரா ரைடர்ஸ் சௌகிபால் சார்ஜர்ஸ் அணியை வீழ்த்தியது.