பொதுநலவாய விளையாட்டு விழா மற்றும் ஆசிய விளையாட்டு விழா ஆகியவற்றில் தெரிவு செய்யப்பட்ட இலங்கை ஆடவர் ரக்பி குழாமைத் தொடர்ந்து, இலங்கை பெண்கள் ரக்பி குழாமும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான அனுமதியைப் பெறுவதற்கான ஆவணம் விளையாட்டுத்துறை அமைச்சர் தேனுக்க விதானகமகேவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
பொதுநலவாய விளையாட்டு விழா மற்றும் ஆசிய விளையாட்டு விழாவில் அணிக்கு 7 பேர் கொண்ட ரக்பி போட்டியைக் கொண்டதாகவே அமைகின்றது.
இப்போட்டிகளுக்காக பெயரிடப்பட்டுள்ள 12 பேர் அடங்கிய இலங்கை மகளிர் ரக்பி குழாத்தில் திலினி கான்ச்சனா, சரனி லியனகே, துலானி பல்லிகொந்தகே, அயேஷா பெரேரா, உமயங்கா தத்சரனி, ஜயந்தி குமாரி, சங்திக்கா ஹேமாகுமாரி, ஷானிக்கா மதுமாலி,நிப்பனி ரசாஞ்சலி, கான்ச்சனா குமாரி, அனுஷா அத்தநாயக்க, ஜீவந்தி குமாரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இவர்களைத் தவிரவும் மேலதிகமாக 8 வீராங்கனைகள் இலங்கை குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.
அனுஷிகா சமரவிக்ரம, நிரஞ்சலா விக்கிரமசிங்க, ஹக்கேஷினி கிருஷ்ணகுமார், பொல்ஹேவகே திலானி, ரந்திக்கா குமுதுமாலி, சமோத்யா மதுமாலி, ஷானிக்கா திலினி, ஹசினி அனுத்தரா ஆகிய 8 வீராங்கனைகளே மேலதிகமாக இணைக்கப்பட்டவர்களாவர்.
பிரித்தானியாவின் பேர்மிங்ஹாம் நகரில் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டு விழா எதிர்வரும் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளதுடன், ஆசிய விளையாட்டு விழா சீனாவின் ஹங்சோ நகரில் செப்டம்பர் 10 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரையிலும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.