செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு இலங்கைக்கு எதிரான அவுஸ்திரேலிய அணி பெயரிடப்பட்டுள்ளது

இலங்கைக்கு எதிரான அவுஸ்திரேலிய அணி பெயரிடப்பட்டுள்ளது

1 minutes read

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி பெயரிடப்பட்டுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஜூன் மாதம் 07 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்த தொடரில் 02 டெஸ்ட், 5  ஒரு நாள் போட்டிகள், 3 T20 போட்டிகள் உள்ளடங்குகின்றன.

அவுஸ்திரேலிய டெஸ்ட் அணித்தலைவர் Pat Cummins-க்கு T20 போட்டிகளில் மாத்திரம் ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

சுழற்பந்து வீச்சாளர் Adam Zampa-விற்கு முதல் குழந்தை பிறந்துள்ளதால், இந்த தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார்.

16 பேர் கொண்ட டெஸ்ட் அணியில் தொடக்க வீரர் Marcus Harris நீக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் தொடரில் இடம்பெறாத Josh Hazlewood, Mitchell Starc, David Warner, Steve Smith, Matthew Wade and Glenn Maxwell ஆகியோர் T20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் மீண்டும் இடம்பெற்றுள்ளனர்.

அவுஸ்திரேலிய A அணி, இரண்டு 50 ஓவர் போட்டிகளிலும் 4 நாட்கள் அடங்கிய 02 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடவுள்ளது.65

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More