ஐக்கிய அமெரிக்காவின் ஒரிகொனில் நடைபெற்றுவரும் உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பெண்களுக்கான 3000 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய இலங்கையின் நிலானி ரத்நாயக, 13ஆவது இடத்தைப் பிடித்து முதல் சுற்றுடன் வெளியேறினார்.
கடந்த சனிக்கிழமை இரவு நடைபெற்ற முதலாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்குபற்றிய நிலானி ரத்நாயக, போட்டித் தூரத்தை 9 நிமிடங்கள் 54.10 விநாடிகளில் நிறைவு செய்து 13ஆவது இடத்தைப் பெற்றார்.
இந்தப் போட்டியில் நோரா ஜெருடோ (கஸகஸ்தான்) 9.01.54 நிமிடம், வெருகுவா கெடசிங் (எத்தியோப்பியா) 9.11.25 நிமிடம், மர்வா பெளசயானி (துனீஷியா), 9.12.14 நிமிடம், ஆகியோர் முதல் 3 இடங்களைப் பிடித்து அரை இறுதிக்குத் தகுதி பெற்றனர்.
இதேவேளை, 3 சுற்றுக்களைக் கொண்டதாக நடைபெற்ற பெண்களுக்கான 3000 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் 42 வீராங்கனைகள் பங்குபற்றியிருந்ததுடன், ஒட்டுமொத்த நிலையில் நிலானி ரத்நாயக 39ஆவது இடத்தைப் பெற்றார்.