எதிர்வரும் பெண்கள் ஆசிய ரி20 போட்டிக்கான 15 பேர் கொண்ட இலங்கைக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சாமரி அதபத்து தொடர்ந்து இலங்கை அணித் தலைவியாக தேர்வு செய்யப்பட்டிருப்பதோடு, அவருடன் ஹசினி பெரேரா, ஹர்ஷிதா மாதவ, நிலக்ஷி டி சில்வா மற்றும் கவீஷா தில்ஹாரி ஆகியோர் துடுப்பாட்ட வரிசையை பலப்படுத்துகின்றனர்.
அனுபவமிக்க இடது கை சுழற்பந்து வீச்சாளர் இனோகா ரணவீரவும் இலங்கை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பெண்கள் ஆசிய கிண்ண ரி20 போட்டி பங்களாதேஷில் வரும் ஒக்டோபர் 01ஆம் திகதி தொடக்கம் 16 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இம்முறை ஆசியக்கிண்ணத் தொடரில் பங்களாதேஷ், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், தாய்லாந்து, மலேசியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய அணிகள் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை குழாம்: சாமரி அதபத்து (தலைவர்), ஹாசினி பெரேரா, ஹர்ஷிதா மாதவி, கவீஷா தில்ஹாரி, நிலக்ஷி டி சில்வா, அனுஷா சஞ்சீவனி, கசுனி நுத்யங்கா, ஓசதி ரணசிங்க, மல்ஷா ஷெஹானி, மதுசிகா மெத்தானந்த, இனோகா ரணவீர, ரஷ்மி சில்வா, சுகந்திகா குமாரி, அச்சினி குலசூரிய, தாரிகா செவ்வந்தி.