சர்வதேச கிரிக்கெட் கெளன்ஸிலின் t20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் வணிந்து ஹசரங்க மீண்டும் மூன்றாம் இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளார்.
தென்னாபிரிக்க வீரர் டெப்ரைஷ் சம்ஷி 2 இடங்கள் பின்தள்ளி 5ஆவது இடத்தை பிடித்துள்ள காரணத்தால் வணிந்து ஹஸரங்க 3ஆவது இடத்தையும், அவுஸ்திரேலியாவின் அடம் ஷாம்பா 4ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
இதில் வணிந்து ஹஸரங்க 692 புள்ளிகளை பெற்றுள்ளதுடன், இரண்டாவது இடத்தில் உள்ள ரஷீட் கானை (696) விட நான்கு புள்ளிகள் குறைவாக உள்ளார். டி20 பந்துவீச்சாளர்கள் வரிசையில் அவுஸ்திரேலியாவின் ஜோஷ் ஹெஷல்வூட் முதலிடத்தை தக்கவைத்துள்ளதுடன், சகலதுறை வீரர்கள் வரிசையில் மொஹமட் நபி முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.