2
ரி20 உலகக் கிண்ணத்திற்கான இலங்கைக் குழாத்தில் இருந்து இடதுகை துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்கவும் காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு பதில் மேலதிக வீரரான அஷேன் பண்டார அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தொடைப் பகுதியில் காயத்திற்கு உள்ளான குணதிலக்க ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிரான போட்டியில் ஆடவில்லை. அவரது காயம் தீவிரம் அடைந்ததை அடுத்தே உலகக் கிண்ணத் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார்.