பல சுற்றுக்களை தாண்டி இறுதி சுற்றுக்கு நுழைந்த ஆர்ஜன்டீனா -பிரான்ஸ் அணிகள் சிறந்த முறையில் தமது ஆட்டத்தை நேற்றைய தினம் மாமேரும் அரங்கில் வெளிப்படுத்தின ஆனால் தமது அபார திறமையால் ஆர்ஜன்டீனா 2022 கட்டார் பிபா உலக கோப்பை சாம்பியனானது
ஒவ்வொரு உலக கோப்பையிலும் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு கெளரவம் வழங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. கோல்டன் பூட் , கோல்டன் போல் , கோல்டன் கிளவ்ஸ் ஆகிய விருதுகள் தலை சிறந்த விருதுகளாக்கும் அவை 1930 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றது.
உலக கோப்பை கால்பந்து தொடரில் சிறப்பாக விளையாடிய லயோனல் மெஸ்ஸி மூன்று தங்கத்தை முத்தமிட்டார். அதிக கோள்களை அடித்து பிரான்ஸ் வீரர் எம்பாப்பே தங்க காலணியை வென்றார். இதையும் மெஸ்ஸியை பெறுவதற்கான சந்தர்ப்பம் இறுதி சுற்றுவரை காணப்பட்டது. எனினும் 7 கோள்களில் மெஸ்ஸி வைத்த கணக்கை உடைத்து எம்பாப்பே ஒரு கோலை அடித்து விருதை தன் வசப்படுத்தினார்.
சிறந்த வீரர்கள் : சம்பியன் கோப்பை ,தங்க பதக்கம் ,கோல்டன் போல் லயோனல் மெஸ்ஸியும், தங்க காலானியை எம்பாபேயும் , தங்க கையுறை மார்டினேஷும் மற்றும் சிறந்த இளம் வீரர் விருதை என்சொ பெர்ணான்டஸும் சுவீகரித்தனர்.