செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் மெஸ்ஸிக்கும் ஆட்டுக்கும் என்ன சம்பந்தம்?

மெஸ்ஸிக்கும் ஆட்டுக்கும் என்ன சம்பந்தம்?

1 minutes read

உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் ஆர்ஜெண்டினா அணி வெற்றி பெற்ற நிலையில், இந்த வெற்றிக்குக் காரணமான மெஸ்ஸியை அனைவரும்
ஆடு படம் போட்டு பாராட்டி வருகின்றனர்.

கட்டாரில் நடைபெற்ற உலகக் கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் ஆர்ஜெண்டினா அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம் உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான மெஸ்ஸிக்கு உலகக் கிண்ண
கனவு நனவாகியுள்ளது.

ஏழு முறை பாலன் டி ஆர் விருது எனக் கால்பந்தில் அனைத்து கிண்ணங்களையும் வென்றுள்ள மெஸ்ஸிக்கு உலகக் கிண்ணம் என்பது எட்டாக்கனியாக இருந்து வந்தது.

அதைத் தனது 35ஆவது வயதில் வென்று வரலாற்றில் இடம் பிடித்துள்ளார் மெஸ்ஸி. இறுதிப் போட்டியில் 2 கோல்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக மெஸ்ஸி இருந்தார் என்பதும் கூடுதல் சிறப்பு.

மேலும்,உலகக் கிண்ணத்தில் 5 போட்டிகளில் ஆட்ட நாயகன் விருது வென்ற ஒரே வீரர் என்ற மகத்தான சாதனையை மெஸ்ஸி படைத்தார். இதன் மூலம்,
கத்தார் உலகக் கிண்ணத்தில் சிறந்த வீரருக்கான தங்கப் பந்து (Golden Ball) விருதையும் அவர் வென்றார்.

2014-ஐ தொடர்ந்து இரண்டாவது முறை GOLDEN BALL விருதை முத்தமிட்டார் மெஸ்ஸி. சமகாலம் மட்டுமின்றி வரலாற்றில் மிகச் சிறந்தவர் என்பதை குறிக்கும் Greatest Of All Time-ன் சுருக்கமே GOAT என சமூக வலைதளங்களில் அழைக்கப்படுகிறது.

அந்த GOAT என்ற சொல் ஆங்கிலத்தில் ஆடு என பொருள்படுவதால் ஆட்டின்
படத்தைப் பயன்படுத்தி அவரை வாழ்த்துகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More