செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் தங்கத்துக்கு குறிவைத்துள்ள இலங்கை பராலிம்பியர்கள்

தங்கத்துக்கு குறிவைத்துள்ள இலங்கை பராலிம்பியர்கள்

1 minutes read

அவுஸ்திரேலியாவின் பிறிஸ்பேன் ஒலிம்பிக் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (30) ஆரம்பமான அவுஸ்திரேலிய தேசிய பரா மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்லும் குறிக்கோளுடன் 3 இலங்கை பராலிம்பியர்கள் பங்குபற்றுகின்றனர்.

பரா மெய்வல்லுநர் போட்டிகளில் ஈட்டி எறிதலில் உலக சாதனையாளர்  தினேஷ் ப்ரியன்த, மற்றொரு நட்சத்திர பரா ஈட்டி எறிதல் வீரர் சமன்த துலான், குண்டு எறிதலில் தேசிய பரா சாதனையாளர்  பாலித்த பண்டார ஆகியோர் அவுஸ்திரேலிய பரா பகிரங்க மெய்வல்லுநர் போட்டியில் இலங்கை சார்பாக பங்குபற்றுகின்றனர்.

டோக்கியயோ 2020 பராலிம்பிக் விளையாட்டு விழாவில் தினேஷ் ப்ரியன்த, எவ்46 பிரிவு ஈட்டி எறிதலில் 67.79 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து உலக சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்திருந்தார்.

அதே விளையாட்டு விழாவில் எவ் 44 பிரிவு ஈட்டி எறிதலில் சமித்த துலான் கொடிதுவக்கு வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.

இந்த வருடம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் பகிரங்க மெய்வல்லுநர் போட்டியில் 23 நாடுகளைச் சேர்ந்த 1450 பராலிம்பியர்கள் பங்குபற்றுகின்றனர்.

அவுஸ்திரேலியா பயணமான இலங்கை பராலிம்பியர்களுக்கு இலங்கையின் பிரதான இணைப்பு வழங்குநரான டயலோக் ஆசிஆட்டா பூரண அனுசரணை வழங்கியுள்ளது.

இந்த மூன்று பரா மெய்வல்லுநர்களின் பயிற்றுநராக ப்ரதீப் நிசான்த சென்றுள்ளார்.

படத்தில் இடமிருந்து வலமாக: சமன்த துலான், பயிற்றுநர் ப்ரதீப் நிசான்த, தினேஷ் ப்ரியன்த, பாலித்த பண்டார.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More