அவுஸ்திரேலியாவை பின்தள்ளி இந்தியா சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) டெஸ்ட் அணி தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளது.
டெஸ்ட் மற்றும் டி20 அணிகளின் தரவரிசை பட்டியலை ஐ.சி.சி நேற்று (02) வெளியிட்டது. 2020 ஆம் ஆண்டு மே முதல் 2022 மே வரை நடந்த போட்டிகளின் முடிவுகள் 50 வீதமும், நடப்பு பருவ போட்டிகள் முழுமையாகவும் கணக்கில் கொள்ளப்பட்டே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் வருடாந்திர தரவரிசையில் சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
இதில் டி20 தரவரிசையில் இந்திய அணி முதலிடத்திலும், இங்கிலாந்து அணி 2ஆவது இடத்தில உள்ளது. டெஸ்ட் தரவரிசையில் 121 புள்ளிகளுடன் அவுஸ்திரேலிய அணியை பின்னுக்கு தள்ளி இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது. 116 புள்ளிகளுடன் அவுஸ்திரேலிய அணி 2ஆவது இடத்தில் உள்ளது.