செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் உடல் ஒத்துழைத்தால் 2024 ஐ.பி.எல். தொடரில் விளையாடுவேன் | தோனி உறுதி

உடல் ஒத்துழைத்தால் 2024 ஐ.பி.எல். தொடரில் விளையாடுவேன் | தோனி உறுதி

2 minutes read

உடல் ஒத்துழைத்தால் 2024 ஐபிஎல் தொடரில் மீண்டும் விளையாடுவதாக சென்னை சுப்பர் கிங்ஸ் அணித் தலைவர் மஹேந்த்ர சிங் தோனி தெரிவித்தார்.

மற்றொரு ஐபிஎல் பருவ காலத்தில் தனது இரசிகர்களுக்கு பரிசு வழங்க விரும்புவதாக தனது ஐந்தாவது ஐபிஎல் சம்பியன் பட்டத்தை வென்ற பின்னர் தோனி கூறினார்.

குஜராத்துக்கு எதிரான இறுதிப் போட்டி தோனியின் 250ஆவது ஐபிஎல் போட்டியாக அமைந்தது.

‘வெற்றிவாகையுடன் ஒய்வுபெறுவது சிறந்த தருணமாக அமையலாம். ஆனால், மீண்டும் விளையாடுவது கடினமானது.   இருந்தாலும்  இரசிகர்களுக்கு பரிசு வழங்குவதற்காக அடுத்த 9 மாதங்களுக்கு உடல் வலிமையைப் பேணுவதற்கு உழைக்கவேண்டியுள்ளது’ என அவர் குறிப்பிட்டார்.

குஜராத்துக்கு எதிரான ஐபிஎல் இறுதிப் போட்டி முடிவில் நடைபெற்ற பரிசளிப்பு வைபவத்தில் பேசிய தோனி, ‘சூழ்நிலையை எடுத்துக்கொண்டால் நான் ஓய்வை அறிவிப்பதற்கு இதுதான் மிகச் சிறந்த தருணம். ஆனால், நான் சென்ற இடமெல்லாம் என்மீது பொழியப்பட்ட அன்பையும் பாசத்தையும் பார்க்கும்போது மிக்க நன்றி என கூறுவது எனக்கு இலகுவான விடயமாகும். ஆனால், அடுத்த 9 மாதங்களுக்கு உடலைப் பேணி இன்னும் ஒரு ஐபிஎல் பருவகாலத்தில் விளையாடுவது கடினமானது. எல்லாமே எனது உடலில்தான் தங்கியுள்ளது. நான் ஒரு தீர்மானத்திற்கு வருவதற்கு இன்னும் 6 – 7 மாதங்கள் இருக்கின்றது. அப்படி விளையாடினால் எனது தரப்பிலிருந்து இரசிகர்களுக்கு அது பரிசாக அமையும். அது எனக்கு இலகுவான காரியம் அல்ல. ஆனால், அவர்கள் என்மீது பொழிந்த அன்புக்காகவும் பாசத்திற்காகவும் அவர்களுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும்’ என 41 வயதான தோனி கூறினார்.

‘இது எனது தொழில்முறை கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசிப் பகுதி என்ற ஓர் எளிய உண்மைக்காக நீங்கள் எல்லோரும் உணர்ச்சிவசப்படுகிறீர்கள். இந்த வருடம் நான் எனது முதலாவது ஆட்டத்தை இங்கே ஆரம்பித்தேன் என நினைக்கிறேன். நான் மைதானத்தில் நடந்து சென்றபோது முழு அரங்கமே எனது பெயரைச் சொல்லி அழைந்தனர். அதைக்கேட்டபோது எனது கண்கள் இயல்பாகவே கண்ணீரை சொரிந்தன. சிறது நேரம் அப்படியே நின்றுவிட்டேன். சற்று நேரத்தில் நான் அனுபவிக்கவேண்டும் என்பதையும் அழுத்தத்தை மனதில் போட்டுக்கொள்ளக்கூடாது என்பதையும் உணர்ந்தேன். சென்னையிலும் நான் கடைசியாக விளையாடியபோதும் இதே நிலைதான். எவ்வாறாயினும் மீண்டும் வந்து என்னால் முடிந்ததை விளையாடுவது நலமாக இருக்கும்’ என்றார் தோனி.

கடந்த காலங்களில் 3ஆம், 4ஆம், 5ஆம்  இலக்கங்களில்   துடுப்பெடுத்தாடிவந்த தோனி இந்த வருட ஐபிஎல் போட்டிகளில் 7ஆம், 8ஆம் இலக்கங்களில் துடுப்பெடுத்தாடினார். தனது இடது முழங்காலில் சிறு உபாதை இருந்தபோதிலும் அதை சமாளித்துக்கொண்டு விளையாடினார்.

இம்முறை இறுதிப் போட்டியில் 6ஆம் இலக்க வீரராக களம் இறங்கிய தோனி, எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தார். அது அவரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த வருடம் 12 போட்டிகளில் துடுப்பெடுத்தாடிய தோனி 182.45 என்ற ஸ்ட்ரைக் ரேட் மூலம் இரசிகர்களைப் பரவசம் அடையச் செய்தார். 57 பந்துகளில் 104 ஓட்டங்களை மொத்தமாக பெற்ற தோனி 10 சிக்ஸ்களை விளாசியிருந்தார்.

12 போட்டிகளில் துடுப்பெடுத்தாடிய தோனி 182.45 என்ற ஸ்ட்ரைக் ரேட் மூலம் இரசிகர்களைப் பரவசம் அடையச் செய்தார். 57 பந்துகளில் 104 ஓட்டங்களை மொத்தமாக பெற்ற தோனி 10 சிக்ஸ்களை விளாசியிருந்தார்.

இவ்வளவு அன்பும், இரசிப்பும் அவரைச் சுற்றி எப்படி இருந்தது என்று தோனியிடம் கேட்டபோது, ‘அவர்கள் என்னை நேசிக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். சீராகவும் விவேகமாகவும் இருப்பது எனக்கு பிடித்த ஒன்று. மேலும் நான் விளையாடும் கிரிக்கெட்டை எல்லோரும் விரும்புகிறார்கள். அவர்களால் வேறு யாரையும் விட என்னுடன் பழக முடியும் என்று நினைக்கிறேன். ஆனால் நான் கூறியது போல், நான் என்னை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை அல்லது என்னை சித்தரிக்க விரும்பவில்லை. எனவேதான் நான் எதையும் எளிமையாக வைத்திருக்க விரும்புகிறேன்’ என பதிலளித்தார்.

மஹேந்த்ர சிங் தோனி உண்மையிலேயே ஒரு சிறந்த ஆளுமை மிக்க தலைவர் மட்டுமல்ல, இலங்கையர் உட்பட கோடானுகோடி இரசிகர்களின் மனங்களைக் கவர்ந்த உத்தம புருஷரும் ஆவார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More