ஆசிய கோப்பை கிரிக்கெட் பாகிஸ்தானில் நடை பெற்றால் விளையாட போவதில்லை என இந்திய கிரிக்கெட் அணி தெரிவித்துள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் ஆகஸ்ட் 31தொடக்கம் செப்டெம்பர் 17 வரை நடை பெற உள்ளதாக கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ள நிலையில் இந்திய பாகிஸ்தான் போட்டிகள் சில பாகிஸ்தானில் நடக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தாம் அந்த போட்டிகளில் கலந்து கொள்ளபோவதில்லை என்று இந்தியா பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து இந்தியா தொடர்பிலான போட்டிகள் இலங்கையில் நடைபெற உள்ளது .இந்த போட்டிகள் இந்தியா, பாகிஸ்தான் , இலங்கை ,பங்காளதேஷ் ,ஆப்கானிஸ்தான்,நேபாளம் ஆகிய நாடுகள் போட்டியிட உள்ள நிலையில் . நான்கு போட்டிகள் பாகிஸ்தானிலும் , ஒன்பது போட்டிகள் இலங்கையிலும் நடக்க உள்ளது.