11
அமெரிக்காவின் இன்டர் மியாமி அணியுடன் ஆர்ஜன்டீன கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி 2025 ஆம் ஆண்டு வரை ஒப்பந்தமாகியுள்ளார்.
7 முறை பலொன் டியோர் விருதைப் பெற்ற அவர் இன்னும் சில நாட்களில் அந்த அணியுடன் சேர்ந்து விளையாடவுள்ளார். “அமெரிக்காவின் கால்பந்து விளையாட்டுக்குப் பங்களிக்க நான் ஆவலுடன் உள்ளேன்” என்றார் மெஸ்ஸி.
மெஸ்ஸி இன்டர் மியாமி அணிக்காக அவரது முதல் ஆட்டத்தை வரும் ஜூலை 22ஆம் திகதி விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.