கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின் அனுசரணையுடன் கிளிநொச்சி மாவட்டச் செயலக விளையாட்டுப் பிரிவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட விளையாட்டுச் சங்கங்கள் ஆகியவற்றின் ஆதவுடன் மாபெரும் விளையாட்டு திருவிழா நடைபெற்றது.
இம் மாதம் 5ம், 6ம் திகதிகளில் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளும் இறுதி நாளான 6ம் திகதி ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு சம்பிரதாய பூர்வ நிறைவு நிகழ்வும் பரிசில் வழங்கல் நிகழ்வும் இடம்பெற்றது.
கிளி பீப்பிள் அமைப்பின் இலங்கைக்கான இணைப்பாளர் திரு. கி. விக்கினராஜா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளீதரன் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டார்.
விளையாட்டுத் திருவிழாவில் நவீன விளையாட்டுப் போட்டிகளுடன் பாரம்பரிய விளையாட்டுக்களும் இடம்பெற்றமை சிறப்பம்சமாகும்.