டி20 போட்டிகளில் ஆடுவதற்காக இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி மூன்று ஒருநாள் மற்றும் மூன்று இம்மாத இறுதியில் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
இதில் ஐ.சி.சி மகளிர் சம்பின்சிப்பின் அங்கமாகவே இலங்கை அணி இங்கிலாந்துடன் ஒருநாள் போட்டிகளில் ஆடவுள்ளது.
இங்கிலாந்து பயணம் மேற்கொள்ளும் இலங்கை மகளிர் அணி எதிர்வரும் ஓகஸ்ட் 28 ஆம் திகதி அருன்டலில் டி20 பயிற்சிப் போட்டி ஒன்றில் ஆடவுள்ளது. இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 சர்வதேச போட்டி வரும் ஓகஸ்ட் 31 ஆம் திகதி ஹோவ்வில் நடைபெறவுள்ளது.