WWE மல்யுத்த போட்டிகளில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் ப்ரே வியாட் என்றே சொல்லலாம். அவர் களத்திற்குள் எண்ட்ரி கொடுக்கும் ஸ்டைலை குழந்தைகள் பார்த்தால் பயப்படுவார்கள்.
அண்டடைகர் போல இருட்டில் எண்ட்ரி கொடுப்பார். ப்ரே வியாட் WWE மல்யுத்த போட்டிகளில் 2009-ம் ஆண்டு அறிமுகமானார். இவர் இதுவரை 2 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு போட்டிகளில் கலந்து கொள்ளாமல் இருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை அவர் உயிரிழந்ததாக பிரபல முன்னாள் WWE வீரர் டிரிபிள் ஹெச் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.