நடைபெற்றுவரும் ஐ.பி.எல். தொடரில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்தை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்குள் இணைக்கப்பட்டுள்ளார்.
இந்த அறிவிப்பை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலிருந்து காயம் காரணமாக இலங்கை வீரர் வனிந்து ஹசரங்க விலகியதன் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வனிந்து ஹசரங்க இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.
வனிந்து ஹசரங்கவுக்கு ஏற்பட்ட காயம் குணமடையாததால் ஐ.பி.எல். தொடரில் விளையாட முடியாது என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு தெரிவித்திருந்தது.
அதன்படி வனிந்துவுக்கு பதிலாக விஜயகாந்த் வியாஸ்காந்த் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
வியாஸ்காந்த் தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக வலை பந்துவீச்சாளராக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.