செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு லங்கா பிறீமியர் லீக் திட்டமிட்டவாறு நடத்தப்படும் – ஐபிஜி நிறுவனம் அறிவிப்பு

லங்கா பிறீமியர் லீக் திட்டமிட்டவாறு நடத்தப்படும் – ஐபிஜி நிறுவனம் அறிவிப்பு

1 minutes read

லங்கா பிறீமியர் லீக்கில் பங்குபற்றும் ஐந்து அணிகளில் ஒன்றான தம்புள்ள தண்டர்ஸ் அணியின் இணை உரிமையாளர்களில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதால் சிக்கல்கள் எழுந்துள்ள போதிலும் ஐந்தாவது லங்கா பிறீமியர் லீக் அத்தியாயம் திட்டமிட்டவாறு நடத்தப்படும் என இனோவேட்டிவ் ப்ரொடக்ஷன் குறூப் FZE (IPG) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

நேர்த்தியான விளையாட்டு மற்றும் விளையாட்டுத்திறனை வெளிப்படுத்தும் வகையில், கிரிக்கெட்டில் சிறந்ததாக இந்தப் போட்டி தொடர்ந்து இருப்பதை உறுதிசெய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

லங்கா பிரீமியர் லீக் 5ஆவது அத்தியாயத்தில் பங்குபற்றும் ஐந்து அணிகளுக்கு இடையிலான போட்டிகள் ஏற்கனவே திட்டமிட்ட முழு அட்டவணைப் பிரகாரம் நடத்தப்படும்.

அண்மைய மாற்றங்களுக்கு மத்தியிலும் தம்புள்ள அணி புதிய உரிமைத்துவத்தின் கீழ் பங்குபற்றும்.

புதிய உரிமைத்துவத்தை உறுதிசெய்து, மாற்றம் சீராக இடம்பெறுவதையும் அவ்வணி தடையின்றி பங்கேற்பதையும் உறுதிசெய்வதற்கான இறுதி கட்டத்தில் நாங்கள் இருக்கிறோம்.

லங்கா பிரீமியர் லீக் நிகழ்ச்சி உரிமைகள் பங்குதாரராக IPG எப்போதும் உயர்தரமான உரிமை மற்றும் நேர்மையை நிலை நிறுத்தி வருகிறது. இந்த தரநிலைகளை பராமரிப்பதில் எங்களின் அர்ப்பணிப்பு நிலைத்திருக்கும்.

லீக்கின் ஒருமைப்பாடு மற்றும் கிரிக்கெட்டின் மீதான ஆர்வம் என்பன போட்டி முழுவதும் பேணப்படும் என  அனைத்து வீரர்கள், ரசிகர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு  நாங்கள் உறுதியளிக்கிறோம்.

‘லங்கா பிரீமியர் லீக் ஒரு முதன்மையான கிரிக்கெட் நிகழ்வாக உள்ளது, இது சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்துவதற்கும், நியாயமான விளையாட்டு மற்றும் விளையாட்டுத் திறனை வளர்ப்பதற்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் எதிர்பார்க்கும் உயர்தர கிரிக்கெட் அனுபவத்தை வழங்கும் வகையில், திட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறும் என்று சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நாங்கள் உறுதியளிக்கிறோம்’ என  IPG குழுமத்தின் அதிபர் அனில் மோகன் தெரிவித்தார்.

எல்பிஎல் போட்டிகள் ஜூலை 1ஆம் திகதியிலிருந்து 21ஆம் திகதிவரை நடத்தப்படும். முதலில் கண்டியிலும் பின்னர் தம்புள்ளையிலும் கடைசியாக கொழும்பிலும் போட்டிகள் நடத்தப்படும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More