செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக மீண்டும் இணைந்தது சிக்னேச்சர்

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக மீண்டும் இணைந்தது சிக்னேச்சர்

2 minutes read

இலங்கையில் மிகவும் பிரசித்தி பெற்றதும் போற்றப்படுவதுமான ஆடவர் ஆடை வர்த்தக நாமமான சிக்னேச்சர் மேலும் 3 வருடங்களுக்கு இலங்கை கிரிக்கெட் அணிகளின் (ஆடவர் மற்றும் மகளிர்) உத்தியோகபூர்வ பங்களாராக நீடிப்பதற்கு முன்வந்துள்ளது.

இதன் மூலம் மூன்று தசாப்தங்களுக்கு மேல் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்துடன் சிக்னேச்சர் வர்த்தக நாமத்தின் சம்பிரதாயபூர்வ மற்றும் சாதாரண ஆடை பங்காளித்துவம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு கோல்ஃபேஸ் ஹோட்டலில்  வைபவம் ஒன்று சனிக்கிழமை (02) நடைபெற்றது.

இந்த வைபவத்தின்போது ஆடவருக்கான பல்வேறு வடிவங்களிலான சிக்னேச்சர் ஆடைகள் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஆடைகள் நாடு முழுவதும் உள்ள ஹமீடியா வர்த்தக நிலையங்களில் விற்பனைக்கு உள்ளது.

இலங்கை ஆடவர் மற்றும் மகளிர் அணிகளின் கிரிக்கெட் சுற்றுப் பயணங்களின்போதும் சர்வதேச கிரிக்கெட் பேரவை மற்றும் ஆசிய கிரிக்கெட் பேரவை ஆகியவற்றினால் ஒழுங்குசெய்யப்படும் வைபவங்கள், விழாக்களின்போதும் வீர, வீராங்கனைகள் சிக்னேச்சர் ஆடைகளை அணிந்துகொள்வர்.

இந்த பங்களாளித்துவம் 2024இல் இருந்து 2027வரை நீடிக்கும் வகையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் (SLC) நிறுவனத்துக்கும் ஹமீடியாக குறூப் நிறுவனம் மற்றும் சிக்னேச்சர் வர்த்தக நாமத்திற்கும் இடையிலான இந்த பங்களாளித்துவம் மூன்று தசாப்பதங்களாக தொடர்கிறது.

இந்த கூட்டாண்மை தொடர்பாக  கருத்து தெரிவித்த   ஹமீடியா குறூப் முகாமைத்துவப் பணிப்பாளர் பௌஸுல் ஹமீத், ‘டுலீப் மெண்டிஸ் கிரிக்கெட் அணித் தலைவராக (1985இல்) விளையாடிய காலந்தொட்டு இலங்கை கிரிக்கெட் அணியின் உத்தியோகபூர்வ ஆடை விநியோகஸ்தராக நாங்கள் இருந்துவருகிறோம். எமது உள்ளூர் உற்பத்தி ஆடைகளை உலகமெங்கும் பிரபல்யம் அடையச் செய்வதில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர். இதனையிட்டு நாங்கள் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறோம். சிக்னேச்சர் வர்த்தக நாமத்திற்கும் கிரிக்கெட் வீரர்களுக்கும் இது ஒரு மிகப் பெரிய பங்காளித்துவமாக அமைகிறது. ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்துடனான இந்த பங்களாளித்துவம் இன்னும் பல்லாண்டுகளுக்கு தொடரும்’ என்றார்.

அங்கு பேசிய சிக்னேச்சர் (Signature) பணிப்பாளர் அம்ஜாத் ஹமீத், ‘ஸ்ரீலங்கா கிரிக்கெட், எமது வர்த்தக நாமமான சிக்னேச்சர் மற்றும் ஹமீடியா குழுமம் ஆகியவற்றின் கூட்டாண்மை குறித்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம். இலங்கையில் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக சந்தையில் விற்பனையாகிவரும் சிக்னேச்சர் ஆடைகள் ஆண்களின் மனங்கவர்ந்த ஆடைகளாக பரிணமிக்க செய்துள்ளோம்.

‘கிரிக்கெட் விளையாட்டு இன்று இலங்கையில் பிரபல்யம் அடைந்துள்ளதுடுன் இலங்கை அணிகள் சிறந்த பெறுபேறுகளை ஈட்டிவருகிறது. வெற்றியோ, தோல்வியோ அனைத்து மக்களின் மனங்களிலும்  கிரிக்கெட்  குடிகொண்டிருக்கிறது. இலங்கையின் அடுத்த தலைமுறையினருக்கு கும் குறிக்கோளுடன் மிகச்   சரியான சந்தர்ப்பத்தில் நாங்கள் கிரிக்கெட்டுடன் மீண்டும் இணைந்துள்ளோம் என நான் கருதுகிறேன். எமது வர்த்தக நாமத்தை உலகம் முழுவதும் பரப்புவதற்கு இந்த கூட்டாண்மை முக்கிய பங்கு வகிக்கும் என நம்புகிறேன். விதவிதமான புதிய நவநாகரிக ஆடைகளை விரைவில் சந்தைப்படுத்துவோம் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்’ என்றார்.

இதேவேளை, இலங்கை ஆடவர் மற்றும் மகளிர் அணிகளுக்கு உத்தியோகபூர்வ ஆடைகளை வழங்குவதற்கான தனது அனுசரணையை வழங்க முன்வந்த ஹமீடியா குழுமத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் பௌஸுல் ஹமீதுக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் கௌரவ பதில் செயலாளர் கிறிஷான்த கப்புகொட்டுவ  நன்றி தெரிவித்தார்.

இந்த வைபவத்தில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா, இலங்கை டெஸ்ட் அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா, மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் அணித் தலைவர் சரித் அசலன்க, மகளிர் அணி சார்பாக ஹர்ஷித்தா சமரவிக்ரம, ஆடவர் அணியின் தலைமைப் பயிற்றுநர் சனத் ஜயசூரிய, மகளிர் அணி பயிற்றுநர் ருமேஷ் ரட்நாயக்க, இலங்கை அணி வீரர்கள், வீராங்கனைகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More