தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் புதன்கிழமை (09) ஆரம்பமான மூன்றாவது ரிட்ஸ்பறி பாடசாலைகள் தொடர் ஓட்டத் திருவிழாவின் முதலாம் நாளன்று கொட்டாஞ்சேனை ஆசீர்வாதப்பர் கல்லூரி, வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை வெற்றிகளை ஈட்டின.
20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 4 x 200 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டி, கலவை தொடர் ஓட்டப் போட்டி ஆகியவற்றில் புனித ஆசீர்வாதப்பர் கல்லூரி முதலாம் இடத்தைப் பெற்றது.
18 மற்றும் 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 4 x 100 தொடர் ஓட்டப் போட்டிகள், 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கலவை தொடர் ஓட்டப் போட்டி ஆகியவற்றில் வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை வெற்றியீட்டியது.
20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 4 x 200 மீற்றர் போட்டியில் புனித ஆசீர்வாதப்பர் கல்லூரி (1:27.20) முதலாம் இடத்தையும் நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி (1:27.32) இரண்டாம் இடத்தையும் கண்டி திரித்துவ கல்லூரி (1:27.40) மூன்றாம் இடத்தையும் பெற்றன.
18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 4 x 200 தொடர் ஓட்டப் போட்டியில் வென்னப்புவை புனித ஜோசப் வாஸ் கல்லூரி (1:29.42), புனித ஆசீர்வாதப்பர் கல்லூரி (1:29.56), மருதானை புனித சூசையப்பர் (1:30.13) ஆகியன முதல் மூன்று இடங்களைப் பெற்றன.
20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்களுக்கான கலவை தொடர் ஓட்டப் போட்டியில் புனித ஆசீர்வாதப்பர் கல்லூரி (10:33.53) முதலாம் இடத்தையும் வலல்ல ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரி (10:47.90) இரண்டாம் இடத்தையும் மாத்தறை ராகுல கல்லூரி (10:48.61) மூன்றாம் இடத்தையும் பெற்றன.
18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 4 x 200 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியில் வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை (1:45.79) முதலாம் இடத்தையும் வலல்ல ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரி (1:47.64) இரண்டாம் இடத்தையும் பம்பலப்பிட்டி திருக்குடும்ப கன்னியாஸ்திரிகள் பாடசாலை (1:48.09) மூன்றாம் இடத்தையும் பெற்றன.
20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 4 x 200 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியில் வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை (1:42.56) முதலாம் இடத்தையும் கொழும்பு கேட்வே கல்லூரி (1:43.04) இரண்டாம் இடத்தையும் பன்னிப்பிட்டி தர்மபால வித்தியாலயம் (1:47.17) மூன்றாம் இடத்தையும் பெற்றன.
20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கலவை தொடர் ஓட்டப் போட்டியில் வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை (12:47.06) முதலாம் இடத்தையும் வலல்ல ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரி (13:03.50) இரண்டாம் இடத்தையும் மாத்தறை மத்திய கல்லூரி (13:25.69) மூன்றாம் இடத்தையும் பெற்றன.
16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 4 x 200 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியில் வலல்ல ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரி (1:47.85), பன்னிப்பிட்டி தர்மபால வித்தியாலயம் (1:47,88), வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை (1:49.49) ஆகியன முதல் மூன்று இடங்களைப் பெற்றன.
தொடர் ஓட்டப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற அணிகளுக்கு வழமைபோல் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்பட்டன,
இரண்டாம் நாள் தொடர் ஓட்டப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.