மாஸ்கோவில் இகோர் கிர்கினால் மீண்டும் நெருக்கடி !! புட்டினின் அதிகாரம் பறிக்கப்பட வேண்டும்!
——————————————————
– ஐங்கரன் விக்கினேஸ்வரா
புட்டினுக்கு எதிரான விமர்சனங்களை கடுமையாக அள்ளிவீசும் தீவிர தேசியவாதி ‘இகோர் கிர்கினால்’ மீண்டும் மாஸ்கோவில் நெருக்கடி உருவாகியுள்ளது. புட்டினின் அதிகாரம் பரிமாற்றப்பட வேண்டும் என்ற தொனியில் இகோர் கிர்கினால் மாஸ்கோவில் மீண்டும் ஊடகங்களின் கழுகுப் பார்வை திரும்பியுள்ளது.
கடந்த வாரம் யெவ்ஜெனி பிரிகோசின் தலைமையில் வாக்னர் குழுவினரின் ஆயுதமேந்திய கிளர்ச்சியில் சில நாட்கள் சூடுபிடித்த மாஸ்கோ விவகாரம், மீண்டும் மற்றொரு ரஷ்ய அதி தீவிர தேசியவாதியின் உரையால் மீளவும் மேற்குலக ஊடகங்களுக்கு பெருத்த தீனியை போட்டுள்ளது.
உக்ரேனிய போரில் வெற்றிபெற முடியாவிட்டால், புட்டின் தனது போர் அதிகாரங்களை ‘பரிமாற்றம்’ செய்ய வேண்டும் என்று மற்றொரு ரஷ்ய தீவிர தேசியவாதியான முன்னாள் ரஷ்ய தளபதி இகோர் கிர்கின் (Igor Girkin) உரையால் மீண்டும் மாஸ்கோவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
வாக்னர் குழுவினரின் (Yevgeny Prigozhin – Wagner Group) கடந்த வாரம் யெவ்ஜெனி பிரிகோசின் தலைமையிலான ஆயுதமேந்திய கிளர்ச்சியில் சில நாட்கள் சூடுபிடித்த மாஸ்கோ விவகாரம், மீண்டும் மற்றொரு ரஷ்ய அதி தீவிர தேசியவாதியின் உரையால் மீளவும் மேற்குலக ஊடகங்களுக்கு பெருத்த தீனியை போட்டுள்ளது எனலாம்.
மாஸ்கோ மீதான முற்றுகை நடக்கலாம் என ஐரோப்பிய ஊடகங்கள் பலவும் எதிர்பார்த்திருந்த போதும், அவர்களின் கிளர்ச்சி இலகுவாக பிசு பிசுத்துப் போனது. இதன் பின் அதி தீவிர தேசியவாதிகள் (Ultra Nationalist) தலைநகரில் கூடி அதிபர் புட்டினால் உக்ரைனில் வெற்றி பெற முடியாவிட்டால், “அவர் தனது அதிகாரங்களை சட்டப்பூர்வமாக மாற்ற வேண்டும்” என்று வாதிட்டனர்.
போர்க்கால ரஷ்யாவில் அசாதாரணமான விமர்சனத்திற்கு சமமானதைப் பகிர்ந்து கொள்ள அல்ட்ராநேஷனலிஸ்டுகள் குழுவினரின் ஒன்று கூடினர் பார்வை அப்பட்டமாக புட்டினை நோக்கி இருந்தது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினால் வெற்றியை அடைய முடியாவிட்டால், அவர் அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும் என வாதிட்டனர்.
தற்போதைய அமைப்பு முழுவதும் உயரடுக்கினரின் பொறுப்பற்ற தன்மையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்று முன்னாள் ரஷ்ய தளபதி இகோர் கிர்கின் (Igor Girkin – Patriots Club) சில வாரங்களுக்கு முன்பு பேட்ரியாட்ஸ் கிளப் கூட்டத்தில் கூறினார்.
ஜனாதிபதி போருக்குப் பொறுப்பேற்கத் தயாராக இல்லை என்றால், அவர் தனது அதிகாரங்களை சட்டப்பூர்வமாக மாற்ற வேண்டும்.
மாஸ்கோவில் கிட்டத்தட்ட மூன்று மணிநேர சந்திப்பு டெலிகிராமில் ஒளிபரப்பப்பட்டது.
புட்டின் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் அதிகாரத்திற்கு வந்தார். ரஷ்யாவில் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த முழுமையான சக்தியைப் பயன்படுத்தத் தயாராக இருக்கும் ஒரு நபராக உருவாகினார். ஆனால் அவரது உக்ரைன் படையெடுப்பிற்கு ஒன்றரை வருடங்களில் அந்த ஸ்திரத்தன்மைக்கான அச்சுறுத்தல்கள் பெருகி வருகின்றன. பெருகிவரும் போர் இழப்புகள் மற்றும் இராணுவத் திறமையின்மை, எல்லை தாண்டிய தாக்குதல்கள் ரஷ்ய சமூகங்களை பயமுறுத்துகின்றன.
யார் இந்த இகோர் கிர்கின் ?
முன்னர் ரஷ்யாவின் ஃபெடரல் செக்யூரிட்டி சர்வீஸில் (FSB) அதிகாரியாக இருந்தவர், கிர்கின் ஸ்ட்ரெல்கோவ் என்றும் அழைக்கப்படுகிறார். மேலும் 2014 இல் கிரிமியாவை மாஸ்கோ இணைத்ததிலும், உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் ஏற்பட்ட மோதலிலும் முக்கிய பங்கு வகித்தார்.
ரஷ்ய தேசபக்தர்கள் அமைப்பாளரான கிர்கின், வாக்னர் குழு தலைவர் பிரிகோஜினுக்கு நண்பர் அல்ல. ஆனால் கிர்கின் – முன்னாள் FSB பாதுகாப்புப் பணியாளர் ஆவார்.
வாக்னர் குழு புட்டினுக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்று முன்பு எச்சரித்திருந்தார். ப்ரிகோஜினைப் போலவே, அவர் சில சமயங்களில் புட்டினை விமர்சிப்பதில் இருந்து தயங்கவில்லை.
ரஷ்யாவின் போரை எவ்வளவு சிறப்பாக நடத்த முடியும் என்று அடிக்கடி வாதிடும் அவர், புட்டின் இந்தப் போரை வெல்லப் போவதில்லை என்றும் இகோர் கிர்கின் எச்சரித்துள்ளார்.
முன்னாள் இராணுவ அதிகாரியான இகோர் கிர்கின் உக்ரைன் மீதான தனது முழு அளவிலான படையெடுப்பில் ரஷ்ய படைகளுக்கு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தலைமை தாங்கியதற்கு மேலும் கடுமையான விமர்சனங்களை அளித்துள்ளார்.
முன்னாள் தளபதி சமூக ஊடகங்களில் ஒரு பெரிய அளவில் தொடர்பவர். ரஷ்ய ஜனாதிபதி மற்றும் அவரது தளபதிகளின் போர்க்கால நடத்தை குறித்த அதிருப்தி பற்றி அடிக்கடி கடுமையான விமர்சனங்களை கூறுபவர்.
டொன்பாசில் (Don Bass)பிரபலமான அவர், தென்கிழக்கு உக்ரைனின் வரலாற்றுப் பெயரான நோவோரோசியாவில் ஒரு வருடத்திற்கு முன்பு “எதிரி எங்கும் தாக்கவில்லை, ரஷ்யாவின் இதயத்தை அழிக்க முன்முயற்சி செய்கிறது. இப்போது நாம் என்ன செய்கிறோம் என விமர்சித்தவர்.
எம்.ஹெச் 17 விமான வழக்கில் இகோர் கிர்கின்:
கிழக்கு உக்ரைனில் 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் விழுந்து நொறுங்கிய மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக நான்கு பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இகோர் கிர்கின், செர்கெய் டுபின்ஸ்கி மற்றும் ஒலெக் புல்டோவ் ஆகிய மூன்று ரஷ்யர்களும் லியோனிட் கார்சென்கோ என்னும் ஓர் உக்ரைன் நாட்டவரும் விமானத்தை எரி கணைகளை கொன்று சுட்டு வீழ்த்தி, பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் 298 பேரை கொலை செய்ததாக நெதர்லாந்து விசாரணையாளர் குற்றம் சாட்டியுள்ளார்.இது தொடர்பான நீதிமன்ற வழக்கு நெதர்லாந்தில் 2020 மார்ச்சில் நடந்தது.
இவ்விமானம் ரஷ்ய – உக்ரைன் எல்லையில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வான்வெளியில் பறந்து கொண்டிருந்தபோது தொடர்பை இழந்தது. அது உக்ரைன் அரசு மற்றும் ரஷ்ய ஆதரவு பெற்ற உக்ரைன் பிரிவினைவாத குழுக்கள் ஆகியோர் இடையே மோதல் நிலவி வந்த நேரம். அப்போது உக்ரைன் ராணுவ விமானங்கள் பலவும் சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தன.
உக்ரேனிய கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் தாக்குதல்கள் நடத்தப்பட்டது.இவ்விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு நான்கு பேருக்கு எதிராக சர்வதேச கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த நால்வரில்,இகோர் கிர்கின் என்பவர் ரஷ்ய உளவுத்துறையின் முன்னாள் கர்னல் ஆவார். அவருக்கு கிழக்கு உக்ரைனில் கட்டுப்பாட்டில் இருந்த டோனெட்ஸ்க் என்ற நகரத்தின் பாதுகாப்பு அமைச்சர் எனும் அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தது.
ரஷ்ய கூட்டமைப்பின் உயரிய ராணுவ
அதிகாரி என மதிக்கப்படுபவர் கிர்கின்.
இந்த முன்னாள் உயர் ராணுவ அதிகாரி கிர்கினே அதிபர் புட்டினால் உக்ரைனில் வெற்றி பெற முடியாவிட்டால், அவர் தனது அதிகாரங்களை சட்டப்பூர்வமாக மாற்ற வேண்டும் என்று பகிரங்மாக விமர்சித்துள்ளார். இவர் பின்னால் படைபல சக்திகள் இல்லாவிடினும், புட்டினுக்கு இன்னோர் பாரிய தலையிடியை ஏற்படுத்தி உள்ளார் என்றே கருதலாம்.