“கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி” எந்த இனத்திற்கும் மொழிக்கும் இல்லாத பெருமை நம் தமிழ் மொழிக்கும் தமிழருக்கும் உண்டு. .”தாய்மொழி ஊற்றாம், தமிழன் என்ற மரபாம்” என்ற சொல்லுக்கு ஏற்ப தமிழை வளர்த்தவர்கள் பழந்தமிழர்கள்.
மனிதனுக்கு மனிதன் மட்டும் உதவுவது ஈகை அல்ல. செடி, கொடிகளுக்குக் கூட உதவி செய்துள்ளனர் இப்படி நாடு, நகரம், என அனைத்தையும் அள்ளி அள்ளி கொடுத்த ஈகை அந்த அளவிற்கு பெருமை வாய்ந்தது நம் தமிழினம். உலகமே வியக்கும் வண்ணம் எண்ணிலடங்காத கருத்தை தமிழ் காப்பியங்கள் வாயிலாக எடுத்துரைத்து வரலாற்றில் சிறப்புற்று விளங்குகிறார்கள். தமிழும் பழமையும், பெருமையும் பெற்று விளங்கிய மொழி,. 247 எழுத்துகளில் உலகையே கட்டியிணைத்த மொழி.அழகுக்கு மேலும் அழகு சேர்ப்பதுபோல் அறிவுக்கு அறிவு சேர்த்து மகிழ்ந்தவன் நம் தமிழன். இது மட்டுமல்ல பல சரித்திர அறிவியல் சாதனைகள் புரிந்தவர்கள் நம் தமிழர்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும். தற்போது உலகம், விஞ்ஞானத்தின் தொட்டிலாய் இருந்தாலும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே தற்போது உள்ளது போல் அறிவியல் தொழில்நுட்பம் வளர்ச்சி பெற்றிருந்தது நம் தமிழ் சமூகம். அதற்கு பல வரலாற்று சான்றுகள் உள்ளன. பண்டைத் தமிழரின் பெருமை பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்..!
நம் தமிழர்கள் பல கலைகள் கற்று தெரிந்தவர்கள்.
ஆம் நம் தமிழர்கள் கட்டிடக்கலை நடனம் சிற்பம் இசை ஓவியம் கவிதை என பல கலைகளில் சிறந்து விளங்கியுள்ளார். அதில் முக்கியமான
ஒரே கல்லில் செய்யப்பட்ட தஞ்சை பெரிய கோவிலும், அதன் ராஜகோபுரத்தையும் எடுத்துக் காட்டாக கூறலாம். மொகஞ்சதாரோ போன்ற பல வரலாற்று நாகரிகம் பொருந்திய கட்டிடங்களுக்கு அடித்தளம் அமைத்தவர்கள் பழந்தமிழர்களே என்பது குறிப்பிடத்தக்கது மேலும் பல அறிவியல் புதிர்களுக்கு தமிழன் ஆதிகாலத்திலேயே விடைகள் கண்டுபிடித்துள்ளான். அதற்கு ஒரு எடுத்துக்காட்டு, “அணுவை துளைத்து ஏழ்கடலை புகட்டி” என்ற வாசகம், அதாவது நாம் இந்த நவீன யுகத்தில்தான் அணுவின் பயன்பாடுகளை அறிந்துள்ளோம். ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அணு பற்றி அறிந்திருந்தான் என்பதையே அந்த வாசகம் சுட்டுகிறது. நாம் இப்போது காணும் பல்வேறு தொழில்நுட்ப- மருத்துவ சிறப்புகள் அக்காலத்திலேயே பழந்தமிழரிடையே வழக்கில் இருந்துள்ளது.தமிழர்கள் வானியல் அறிவு பெற்றிருந்தார்கள்
அமாவாசை, பவுர்ணமி என இன்று குறிக்கப்படுவதினை அன்றே கணித்தவர்கள் அந்த அளவிற்கு வானியல் நுட்பத்தினை பற்றி அன்றே அறிந்து வைத்திருந்தனர்.
பழந்தமிழரின் மருத்துவவியல் வியக்கத்தக்க ஒன்றாக இன்றும் அறியப்படுகிறது.அறிவியல் கண்டுபிடிப்புகள் சக்கரம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். சக்கரம் என்ற ஒன்றை கண்டுபிடித்து நம் தமிழர்களே சக்கரம் இரண்டை உருவாக்கி அதில் மாடுகளைப் பூட்டி தனக்குத் தேவையானவற்றை அதன் மூலம் எளிதில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு எளிதில் கொண்டு செல்ல முடியும் என்பதை நிரூபித்தது நம் தமிழ் சமூகம்.
“நீரின்றி அமையாது உலகு” என்ற வள்ளுவரின் வரிகளுக்கு இணங்க,நீர் மேலாண்மையில் தமிழரின் பங்கு இன்றியமையாதது. தமிழர்களின் நீர் மேலாண்மை பற்றி எடுத்துரைப்பதற்கு மிகச் சிறந்த சான்றாகும்.ஆயிரக்கணக்கான நீர்நிலைகள், ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், அணைக்கட்டுகள், வாய்க்கால்கள் அவற்றோடு தொடர்புடைய பிறகட்டுமானங்கள் சங்ககாலம் தொட்டு இன்றளவும் இருப்பதைக் காணலாம். அவற்றின் சிறப்பே, அவை எல்லாம் புதைபொருள் ஆகிவிடாமல் இன்றும் பயன்படுகின்றன என்பதே ஆகும். நாம் காணும் எண்ணற்ற கண்மாய்களும், ஏரிகளும் தமக்குள் ஒப்பற்ற செய்திகளைப் புதைத்துப் கொண்டுள்ள வரலாற்றுப் பெட்டகங்கள்.
தமிழ்நாட்டின் தொன்மையான நகரமான காஞ்சிபுரத்தை சுற்றி நூற்றுக்கணக்கான ஏரிகள் வெட்டப்பட்டு நீர் சேகரிக்கப்பட்டுள்ளன. கரிகால சோழனால் கட்டப்பட்ட கல்லணை பொறியியல் சாதனை என்ரே சொல்லலாம். தண்ணீரைப் பகிர்வதிலும், சிக்கனமாகப் பயன்படுத்துவதிலும் தமிழர்கள் கடைப்பிடித்த நீர் மேலாண்மைக் கோட்பாடுகள் இன்றளவும் ஏற்புடையவையாக உள்ளன. பண்டைய தமிழர்களின் நீர் மேலாண்மையை தான் இன்று அளவும் நாம் பின்பற்றி வருகின்றோம்.
தமிழரின் பெருமைகளை பறைசாற்றும் விதமாக தொல்பொருள் ஆராய்ச்சி துறை சார்பில் தமிழகத்தில் ஆதிச்சநல்லூர் மற்றும் கீழடி போன்ற இடங்களில் அகழ்வாய்வு பணிகள் நடைபெற்று அதில் கிடைக்கும் பொருள்களை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அந்த பொருட்களை பார்த்தாலே பழந்தமிழரின் அறிவியல் நாகரீக வளர்ச்சி எப்படி இருந்தது என்பதனை நமக்கு உணர்த்துகின்றது. கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட பொருட்கள் பல்வேறு வினாக்களுக்குப் பதிலளித்துள்ளன. இதனை பலதரப்பட்ட மக்கள் தினமும் பார்த்து விட்டு செல்கின்றனர் இதனால் உலகெங்கிலும் வாழும் நம் தமிழ் மக்களுக்கு பெருமை புகழும் சேர்த்துள்ளது. ஒரு சமூகம் என்பது எவ்வாறு இருக்க வேண்டும் அதற்கு என்னென்ன தேவை என்பதனை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே கணித்து அதனை நடைமுறைப்படுத்தி யவன் தமிழன் பழந்தமிழரை போற்றுவோம். தமிழரின் கலாச்சாரத்தை காப்போம். வாழ்க தமிழ் வாழ்க தமிழர் பண்பாடு.
மனோஜ் சித்தார்த்தன்