புருண்டியில் நடந்த உள்நாட்டுப் போரைப் பற்றி அறிக்கை செய்ததற்காக 1994 ஆம் ஆண்டில் மன்னிப்புச் சபையால் ஆண்டின் சிறந்த பத்திரிகையாளராகவும் அவர் பெயரிடப்பட்டார். மேலும் ருவாண்டாவில் நடந்த இனப்படுகொலை குறித்து அறிக்கை செய்த முதலாவது பிபிசி ஊடகரும் இவர் தான்.
அவர் தான் பி.பி.சி. சர்வதேச செய்தி சேவையின் சிரேஸ்ட ஊடகவியலாளர் ஜோர்ஜ் அழகையா. கிழக்கிலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட, பி.பி.சி சர்வதேச செய்தி சேவையின் சிரேஸ்ட ஊடகவியலாளர் ஜோர்ஜ் அழகையா தனது 67வது வயதில் காலமானார்.
கடந்த இருபது ஆண்டுகளாக பிபிசி செய்திகளை வழங்கிவந்த இவர் ருவாண்டா முதல் ஈராக் வரையிலான நாடுகளில் வன்முறைகள் கோலோச்சிய காலத்தில் அந்தந்த நாடுகளில் இருந்து துணிகரமான ஊடக பணியயை செய்திருந்தார். இதற்காக அவருக்கு விருதுகளும் வழங்கப்பட்டிருந்தது.
ஜோர்ஜ் அழகையா ஒரு சிறந்த பத்திரிகையாளர் என்பதை விட, அவரது இரக்கம், பச்சாதாபம் மற்றும் அற்புதமான மனிதாபிமானத்தால் அனைவராலும் நேசிக்கப்பட்டவர்்என பிபிசி இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
தென்னாப்பிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலா, பேராயர் டெஸ்மண்ட் டுட்டு, ஐ.நா பொதுச் செயலாளர் கோபி அன்னான் உள்ளிட்ட பிரமுகர்களையும் இவர் செவ்வி கண்டிருந்தார். இவர் பி.பி.சி செய்தி சேவையில் 2007ம் ஆண்டு முதல் செய்திகளையும் வாசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தென் இலங்கையின் கிழக்கில் உள்ள கல்முனையைச் சேர்ந்த டொனால்ட் அழகையா, கொழும்பில் பொதுப்பணித்துறையில் மூத்த பொறியாளராகப் பணிபுரிந்தவர். ஐந்து குழந்தைகளைக் கொண்ட அவர் குடும்பம் ஆபிரிக்க நாடான கானாவுக்கு குடிபெயர்ந்து சென்றனர். இளம் வயதில் கானாவில் கல்வி கற்ற அவர் பின்னர் இங்கிலாந்துக்கு குடியேறினர்.
A Passage to Africa நூல்:
கானாவுக்கு குடிபெயர்ந்து அங்கே இளம் வயதில் கானாவில் கல்வி கற்றதையும், அநுபவங்களையும் ஜோர்ஜ் அழகையா A Passage to Africa எனும் நூலில் சுவாரஷ்யமாக எழுதியுள்ளார். ஆப்பிரிக்காவில் அழகையா வளர்ந்த ஆண்டுகள், அவரது அநுபவங்கள், மற்றும் ஒரு நிருபராக அவரது சவாலான காலங்களைப் பற்றி இந்நூலில் சுவாரஷ்யமாக எழுதியுள்ளார்.
ஜோர்ஜ் அழகையா உலகறிந்த ஒரு ஊடகவியலாளர் எனினும் அவரை ஒரு எழுத்தாளராக அறிமுகப் படுத்துவதே A Passage to Africa எனும் சுவாரஷ்யமான அநுபவங்களை கூறும் நூலாகும். நெல்சன் மண்டேலா, டெஸ்மன் டுடு, ரொபர்ட் முகாபே போன்ற பிரபலங்களை ஜோர்ஜ் அழகையா நேர்காணல் செய்துள்ளதை தொலைக்காட்சிகளில் பார்த்தாலும், அவருடய எழுத்தாற்றலை உலகிற்கு அறியத்தருவதே இந்நூலாகும்.
1994 இல் ஈராக்கின் குர்துகளுக்கு எதிரான சதாம் குசைனின் இனப்படுகொலையை வெளிப்படுத்தியதில் இவரது ஊடகப்பணி முக்கியானது.
ஜோர்ஜ் அழகையாவின் மரண செய்தியைக் கேட்டு அனைவரும் நம்பமுடியாத அளவிற்கு வருத்தமாக உள்ளதாக பிபிசி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
கடந்த இருபது வருடங்களாக பிபிசியின் நியுஸ் சிக்சின் (News Six) தொகுப்பாளராக பணியாற்றினார். அதற்கு முன்னர் பிபிசியின் விருதுகள் பெற்ற வெளிநாட்டு செய்தியாளராக அவர் பணியாற்றியிருந்தார். கடந்த சில ஆண்டுகளாக குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் இந்த நோயுடன் போராடி அமைதியாக மரணமடைந்தாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
ஜோர்ஜ் அழகையா ,ஈராக் ,ருவண்டா உட்பட பல நாடுகளில் ஊடகப் பணியாற்றியிருந்தார். 1990களின் ஆரம்பத்தில் சோமாலியாவில் பஞ்சம் மற்றும் போர் குறித்த செய்திகளிற்காக விருதுகளை பெற்ற ஜோர்ஜ் அழகையா, வடக்கு ஈராக்கில் குர்திஸ் மக்களிற்கு எதிரான சதாம்ஹ சைனின் இனப்படுகொலை குறித்த செய்திகளிற்காக பவ்வா விருதுகளிற்காக நியமிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
‘The Burning Land’ நாவல்:
2018 இல் வெளியான ஜோர்ஜ் அழகையாவின் மற்றொரு நூலான ‘The Burning Land’ தென்னாபிரிக்காவில் நடைபெறும் ஊழலையும், கொலைகளையையும் பிந்தளமாகக் கொண்ட, அவருடைய முதலாவது நாவலாக வெளியாகியிருந்தது.
The Burning Land நூலானது
பேராசையும் ஊழலும் ஒரு தேசத்தின் நம்பிக்கையை களங்கப்படுத்துவதால், முன்னாள் பால்ய நண்பர்களான லிண்டி மற்றும் காகிசோ ஆகியோருக்கு அரசியல் மிகவும் தனிப்பட்டதாகிறது. அவர்களின் அன்புக்குரிய தாய்நாடான தென்னாப்பிரிக்கா, அதன் நிலம் மற்றும் வளங்களுக்கான உரிமைகளுக்காக நாடுகள் போராடுவதால், அழிவை நோக்கு வேகமாக மாறி வருகிறது.
தென்னாபிரிக்க நாட்டின் பிரகாசமான இளம் நம்பிக்கைகளில் ஒருவரின் கொலையுடன், உருகி நன்றாகவும் உண்மையாகவும் எரிகிறது. அவரது கொலையாளிக்கான வேட்டை தீவிரமடையும் போது, லிண்டியும் ககிசோவும் அவர்கள் விரும்பும் நிலத்தையும் மக்களையும் பாதுகாக்க ஒன்றாக வருகிறார்கள். எவராலும் – குறைந்த பட்சம் அவர்களால் – கட்டுப்படுத்த முடியாத வகையில் நிகழ்வுகள் எழுவதை இந்நாவல் 2018 இல் ஜோர்ஜ் அழகையாவின் மற்றொரு படைப்பாக ‘The Burning Land’ எனும் நூல் விளங்குகிறது.
– ஐங்கரன் விக்கினேஸ்வரா