ஆயுத நிறுவனங்களின் இலாபங்களுக்காக மக்கள் அழிவா?
ஹமாஸ்-இஸ்ரேல் போரினால் லாபம் யாருக்கு?
——————————————————
– ஐங்கரன் விக்கினேஸ்வரா
(ஹமாஸ்-இஸ்ரேல் மோதல் தொடங்கியதிலிருந்து இந்த இரண்டு ஆயுத நிறுவனங்களின் பங்குசந்தை வர்த்தகமும் அதீதமாக உயர்ந்து சென்று கொண்டிருக்கிறது. லாக்ஹீட் மார்ட்டின் பங்கு விலை கிட்டத்தட்ட 9 சதவிகிதமும், நார்த்ராப் க்ரம்மன் பங்குகள் சுமார் 12 சதவிகிதமும் அதிகரித்துள்ளன)
காசாவில் பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் கடுமையாக தரைவழியாக தாக்குதல் தொடுத்துள்ள நிலையில், தற்போது வரை இரு தரப்பிலும் பலி எண்ணிக்கை 10,000க்கும் மேலாக நெருங்கியுள்ளது. இவ்வளவு ஆபத்தை ஏற்பத்தும் போரினால் யாருக்கு லாபம்? யார் பயனடைகிறார்கள்? எனும் கேள்வி சாதாரண மக்கள் மனதில் எழுந்திரும்.