அவுஸ்திரேலிய மண்ணில் தயாரிக்கப்பட்ட முதல் விண்கலம் விண்ணில் ஏவப்படுகிறது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராக்கெட் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் குயின்ஸ்லாந்தில் உள்ள ஏவு தளத்த்தில் இருந்து ஏவப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட முதல் விண்கலம்:
கோல்ட் கோஸ்ட்டைத் ( GOLD COAST) தளமாகக் கொண்ட நிறுவனமான ‘கில்மோர் ஸ்பேஸ்’ அமைப்பான ‘எரிஸ்’ என்ற பெயரில் இறுதி தயாரிப்புகளை முடித்துள்ளது. இது 2024 மார்ச் மாதத்தில் ஏவப்படும் என்று நம்புகிறது.
25 மீட்டர் உயரமும், 30 தொன் எடையும் கொண்ட மூன்று நிலை எரிஸ் ராக்கெட் ஐந்து ஹைப்ரிட் என்ஜின்களால் இயக்கப்படுகிறது. அவை திட எரிபொருள் மற்றும் ஒரு திரவ ஆக்சிடரைசரைக் கொண்டுள்ளன.
முதலில் 2023 இல் புறப்படும் என எதிர்பார்க்கப்பட்ட எரிஸ் விண்கலம், 500 கிமீ உயரத்தில் உள்ள
பூமத்திய ரேகை சுற்றுப்பாதையில் ஏவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் ஒப்புதல்கள் உட்பட பல்வேறு ஒழுங்குமுறை அனுமதிகளைப் பெற்ற பிறகு, ‘கில்மோர் ஸ்பேஸ்’ இப்போது புதிய அவுஸ்திரேலிய விண்வெளி ஏஜென்சியின் இறுதி ஏவுகணை ஒப்புதலுக்காக காத்திருக்க வேண்டி உள்ளது.
குயின்ஸ்லாந்தில் ஏவுப்படுல்:
குயின்ஸ்லாந்தில் உள்ள போவெனுக்கு வெளியே பிரத்யேகமாக கட்டப்பட்ட ஏவுதளத்தில் இங்கு தயாரிக்கப்பட்ட அவுஸ்திரேலியக்கு சொந்தமான ராக்கெட்டை ஏவப்டுகிறது என்பது வரலாற்றுச் சிறப்புமிக்கதாக கருதப்படுகிறது.
1950களின் போது அமெரிக்க மற்றும் பிரித்தானிய ராக்கெட்டுகள் தெற்கு அவுஸ்திரேலியல் உள்ள வூமேரா சோதனை தளத்திலிருந்து ஏவப்பட்டன. மேலும் எரிஸ் வெற்றி பெற்றால், விண்கல தொழில்நுட்பத்தை அணுகும் 12வது நாடாக அவுஸ்திரேலிய மாறும்.
நாங்கள் வேறொருவரின் தொழில் நுட்பத்தை நம்பியுள்ளோம். ஆனால் இப்போது இது எங்களுடையது, நாங்கள் இதை வடிவமைத்துள்ளோம், அவுஸ்திரேலியாவில் இதை உருவாக்கியுள்ளோம். இது அவுஸ்திரேலிய உருவாக்கம் என முன்னாள் வங்கியாளரும் வாழ்நாள் முழுவதும் விண்வெளி ஆர்வலருமான திரு கில்மோர் கூறியுள்ளார்.
எனவே, அவுஸ்திரேலியா என்ன விரும்புகிறது என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன், மேலும் எங்கள் முக்கிய கூட்டாளிகள் அனைத்தும் நூற்றுக்கணக்கான மில்லியன் முதல் பில்லியன் டாலர்களை ஏவுதளத் திறனுக்காகக் கொட்டி வருகின்றன என்பதை உணர வேண்டும் என விண்வெளி ஆர்வலருமான திரு கில்மோர் தெரிவிக்கிறார்.
அவுஸ்திரேலிய விண்வெளித் துறை:
அவுஸ்திரேலியவின் வளர்ந்து வரும் விண்வெளித் துறையின் உறுப்பினர்கள், 2022 தேர்தலுக்குப் பிறகு, இந்தத் துறையில் அரசு கவனம் செலுத்தாததால், லாபகரமான வாய்ப்புகள் இழக்கப்படுவதைப் பற்றி தொடர்ந்து எச்சரிக்கையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், தொழில் மற்றும் அறிவியல் அமைச்சர் எட் ஹுசிக், இயற்கை பேரழிவுகள், விவசாயம் மற்றும் கடல் கண்காணிப்பு பற்றிய தரவுகளை சேகரிக்க அவுஸ்திரேலிய செயற்கைக் கோள்களை உருவாக்குவதற்கான மாரிசன் அரசாங்கத்தின் திட்டத்தை நிறுத்துவதாக அறிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு மே மாதம் ‘கில்மோர் ஸ்பேஸ்’ தொழிற்சாலைக்கு விஜயம் செய்த பிரதமர் அந்தோனி அல்பானீஸ் எரிஸ் விண்கல திட்டத்தை “ஒரு சிறந்த அவுஸ்திரேலிய வெற்றியின்கதை” என்று அறிவித்தார்.
அவுஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட்டை நீங்கள் பார்க்கிறீர்கள், அது வான் சுற்றுப்பாதையில் ஏவுவதற்கு வெற்றிகரமாக முயற்சிக்கிறது என பிரதமர் திரு அந்தோனி அல்பானீஸ் கூறியுள்ளார்.
ஐங்கரன் விக்கினேஸ்வரா