நீங்கள் வண்ண வண்ண நிறங்களில் மனதை மயக்கும் வானவில்லை பார்த்திருக்கிறீர்கள் தானே?
மழை வந்த பிறகு வானவில் தோன்றும் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் வானவில் தோன்ற மழை மட்டுமே காரணம் இல்லை என்கின்றனர் ஆய்வாளர்கள்.
பனிமூட்டம், காற்றில் மிதக்கும் கண்ணுக்குப் புலப்படாத சின்னச் சின்ன தூசு, காற்றில் நிறைந்திருக்கும் நீர்த்துளிகள் என்பன வானவில் தோன்ற மிக முக்கிய காரணம் ஆகும்.
அத்துடன் நமது கண்களுக்கு தெரிவது போன்று வானவில் அரை வட்டமாக இருக்காது, முழு வட்ட வடிவில் தான் தோன்றும்.
கானல் நீர் போல ஒளிச்சிதறல் மற்றும் எதிரொலித்தல் மூலம் நம் கண்களுக்குத் தெரிகிற ஒரு பிம்மம் மட்டுமே வானவில்.
எவ்வாறு தோன்றும்?
வானத்தில் உள்ள நீர்த்துளிகளில் (அதுதான் மழையாகப் பொழிகிறது) சூரிய ஒளி ஊடுருவி, அது சிதறலடைந்து,
நீர்த்துளிகளின் பின்புறமாக எதிரொலிப்பதால் உருவாகும் நிகழ்வே வானவில்.
ஒரு குறிப்பிட்ட கோணத்தில் இருந்து பார்த்தால் மட்டுமே வானவில், நம் கண்களுக்குத் தெரியும்.
நிறங்கள்
வானவில்லில் நீலம், கருநீலம், ஊதா, பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என ஏழு நிறங்கள் இருக்கும். ஆங்கிலத்தில் VIBGYOR என்று கூறுவர்.
நன்றி : முத்துமணி இணையம்